2.4 மில்லியன் பவுண்டுகள் சம்பந்தப்பட்ட உலகளாவிய பணமோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, இங்கிலாந்தில் இரண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு மொத்தம் 12 ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்கள் மேலும், 1.6 மில்லியன் பவுண்டுகள் அளவு மோசடி செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.


ஸ்காட்லாந்து யார்டின் பொருளாதார குற்றப்பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பணமோசடி மற்றும் மோசடி குற்றங்களில் ஈடுபட்டதற்காக, விஜய குமார் கிருஷ்ணசாமி, வயது 32, மற்றும் சந்திரசேகர் நல்லயன், வயது 44, ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை தண்டனை விதிக்கப்பட்டது.


கிரிமினல் சொத்துக்களை மறைக்க, மாற்ற நினைத்தது, மேலும் இடமாற்றம் செய்ய நினைத்தது ஆகிய குற்றங்களுக்காக விஜய குமார் கிருஷ்ணசாமிக்கு ஐந்து ஆண்டு ஒன்பது மாத சிறை தண்டனையும்,  சந்திரசேகர் நல்லயனுக்கு ஏழு ஆண்டுகள்  சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.


"வெட்க உணர்வே இல்லாத இவர்கள் இருவரும், அவர்களைச் சேர்ந்தவர்களுக்கு  பெரும் துயரத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளார்கள். பணமோசடிக்கு காரணமானவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் என்பதை இந்த வழக்கு காட்டுகிறது" என்று பெருநகர காவல்துறையின் மத்திய சிறப்பு குற்றவியல் - பொருளாதார குற்றப்பிரிவை சேர்ந்த துப்பறியும் கான்ஸ்டபிள் மிலேனா பிங்லி கூறினார்.


பணமோசடி செய்தவர்கள், தான்  தப்பிவிடலாம்  என்று நம்புபவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கை மணி என்று, கூறிய அவர், " குற்ற செயல்களின் வலுவான நெட்வொர்கை கண்டறிய வங்கித் துறையுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்." என்றார்


"இது ஒரு சிக்கலான வழக்கு, இந்த விசாரணையின் போது வங்கித் துறையில் இருந்து எங்களுக்கு உதவியவர்களுக்கும் சைபர் பாதுகாப்பு  துறையினர் வழங்கிய உதவிகளுக்கும்  நன்றி கூற விரும்புகிறேன்" என்று திரு பிங்லி கூறினார்.


இந்த வழக்கு 2018 ஆம் ஆண்டின் வழக்காகும். தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் கிரவுன் நீதிமன்றத்திற்கு வந்த  பார்க்லேஸ் வங்கி அறிக்கை ஒன்றில் பல ஐபி முகவரியில், பல வர்த்தக கணக்குகளில் பண மோசடி செய்ய, மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்தது.


"குற்றத்தை  தடுப்பதற்கும், வாடிக்கையாளர்களின் நிதியைப் பாதுகாப்பதற்கும் ஆன  முயற்சிகளில் சட்ட அமலாக்க துறையை ஆதரிப்பதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்" என்று பார்க்லேஸ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


"மெட்ரோபொலிட்டன் போலிஸார் நடத்திய விசாரணையின் போது நாங்கள் இணைந்து பணியாற்றினோம், வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறோம்" என்று அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.


ஆபரேஷன் பால்கல்லா மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார குற்றப் பிரிவின் அதிகாரிகள் சைபர் பாதுகாப்பு குழுவுடன் (சிடிஏ) இணைந்து பணியாற்றினர். குரோய்டன் பகுதியில் இருந்த சந்தேகத்திற்கிடமான ஐபி முகவரிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.


"எம்.பி.எஸ் உடன் ஆபரேஷன் பால்கல்லாவுடன் இணைந்து பணியாற்றுவதில் சி.டி.ஏ மகிழ்ச்சி அடைந்தது. நிதித்துறையை குறிவைத்து நடக்கு திட்டமிடப்பட்ட குற்றவியல் நெட்வொர்க்குகளை சமாளிக்க பொது தனியார் கூட்டாண்மை பணிக்கான சிறந்த எடுத்துக்காட்டு இதுவாகும். அவர்களின் கிரிமினல் ஆதாயங்களுக்காக பணம் பெற இந்த நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று, "சிடிஏவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவன் வில்சன் கூறினார்.


"சி.டி.ஏ அவர்களின் பிண்ணனியை அறிய,  வங்கிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவும், குறிப்பிடத்தக்க குற்றச் செயல்களை அடையாளம் காணவும் மற்றும் எம்.பி.எஸ்ஸுக்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய உளவுத்துறையை வழங்கவும் முடிந்தது, இது  குற்றவாளிகளை கைதுசெய்து அவர்களை தண்டிப்பதற்கும் அவர்களது குற்றவியல் நெட்வொர்க்கை சீர்குலைப்பதற்கும் வழிவகுத்தது," என்று அவர் கூறினார்.


கடந்த ஆண்டு மே 2 ஆம் தேதி, இந்த முகவரிகளில் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது, மேலும் விஜய குமார் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டார்.


சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை மற்றும் நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகள் தொடர்பான  ஆவணங்கள் கிடைத்தன.


விஜய குமார் கிருஷ்ணசாமியின் மொபைல் போனிலிருந்து  பல்வேறு சந்தேகத்திற்குரிய  கணக்குகளை ஆன்லைனில் அணுகுவது மேலும் ஏடிஎம்களில் இருந்து  ஆயிரக்கணக்கில் பண பரிவர்த்தனைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆதாரங்களில் இருந்து சந்திரசேகர் நல்லயன் மற்றொரு சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டார்.


கிரிமினல் நிதியை மாற்ற விஜய குமார் கிருஷ்ணசாமி தான் வழிநடத்தியிருக்கிறார் என்று நீதிமன்றம்  அறிந்து கொண்டது. இந்த மோசடியில் அவர் மட்டும் அல்லாமல் வெளியிருந்தும் நபர்கள் உதவியிருக்கிறார்கள்..


மொத்தத்தில், இந்த ஊழலினால், 24 நிறுவனங்கள்  பாதிக்கப்பட்டிருக்கிறது.... ஒரு மோசடி மின்னஞ்சல் மூலம் வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை பெறுகிறார்கள், அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை மாற்றுவதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.


நிறுவனம், அவர்கள் தங்கள் உண்மையான வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதாக நம்பி, சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுகிறது. அவர்களது உண்மையான வாடிக்கையாளர் கட்டணத்தை  கேட்காத வரை அவர்கள் மோசடி செய்யப்பட்டுவிட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.


அதைப்பற்றி தெரிந்து கொள்ளும் போது, இந்த "மோசடி"  கணக்கிற்கு பெரும்பாலான பணம் மாற்றப்படட்டிருக்கும், அதை மீட்டெடுப்பதும் கடினம்


இந்த "மோசடி" கணக்குகளில் பணம் செலுத்தியதால் 16 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த மோசடியில் மொத்தம் 2.4 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் பண பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதில், வேறு எட்டு பேர் தங்களுக்கு வந்த மின்னஞ்சல்கள் உண்மையானவை அல்ல என்பதை உணர்ந்து, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை  காவல்துறைக்கு தெரிவித்திருக்கிறார்கள். இந்த புகார்கள் முயற்றிலும் உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள்  1.6 மில்லியன் பவுண்டுகளை இழப்பது தடுக்கப்பட்டது...


2018 பிப்ரவரி 1, மற்றும் மே 1, 2019 க்கு இடையில் கிரிமினல் சொத்துக்களை மறைக்க, மாற்ற, இடமாற்றம் செய்ய சதி செய்ததாக, விஜய குமார் கிருஷ்ணசாமி மீது, இந்த ஆண்டு பிப்ரவரியில்,  ஒரு புகார் தெரிவிக்கப்பட்டது


ஆன்லைன் வங்கி வழியாக "மோசடி" கணக்குகளை வைத்திருப்பதாகவும், இந்த கணக்குகளை கண்காணிப்பதாகவும், மற்றும் பணத்தை மாற்றுவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த செயல்கள் தவறானது என்று தனக்கு தெரியும் என்றும் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.


கிரிமினல் சொத்துக்களை மறைக்க, மாற்ற, இடமாற்றம் அல்லது அகற்ற சதி செய்தது உண்மை தான் என்று சந்திரசேகர் நல்லயன் ஒப்புக்கொண்டார். குரோய்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணைக்கு பின்னர், இந்த வாரம் அனைத்து குற்றங்களுக்காகவும் அவருக்கும்,அவரது கூட்டாளிக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.


மொழியாக்கம் - நடராஜன் விஜயகுமார்