இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இதுவரை புழக்கத்தில் இருந்து வந்த ரூ.2000 நோட்டுக்களை திரும்பப்பெறுவதாக அறிவித்த பிறகு ரூ.2000 நோட்டுக்களை வைத்திருக்கும் பலரும் வங்கிகளில் டெபாசிட் செய்து, வங்கிகளில் பரிமாற்றியும் வருகின்றனர்.  அதன்படி பெரும்பாலான தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் போது ஒரு படிவத்தை பூர்த்தி செய்து சரியான அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று வங்கிகள் வலியுறுத்துகிறது.  இருப்பினும், கணக்கு வைத்திருப்பவர்கள் பரிமாற்ற செயல்முறைக்கு தங்கள் கணக்கு விவரங்களை மட்டுமே வழங்க வேண்டும்  குறிப்பிட்ட கரன்சி நோட்டுகளை சரியான முறையில் மாற்றுவதற்காகவே இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது.  சில பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஇ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) போன்றவற்றுக்கு வங்கி கணக்கு வைத்திருக்காத வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை செய்வதற்கான அடையாளச் சான்றுகளை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், வெவ்வேறு தனியார் வங்கிகளில் கரன்சி நோட்டுகளை மாற்றுவதற்கான நடைமுறைகள் மாறுபடலாம் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.  பிற பொதுத்துறை வங்கிகள் அந்தந்த தலைமை அலுவலகங்களில் இருந்து வரும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் அவர்கள் மாறுபட்ட விதிமுறைகளை பின்பற்றுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Post Office Scheme: அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் TDS கழிக்கப்படாது! யார் யாருக்கு பயன்?


பல்வேறு வங்கிகளின் கிளை அதிகாரிகள் தங்கள் வங்கிகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்ற என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றது என்பதை பற்றி கூறியுள்ளனர்.  ஹெச்டிஎஃப்சி வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களாக இருந்தாலும் சரி, சேமிப்பு கணக்கு வைத்திருக்காத வாடிக்கையாளர்களாக இருந்தாலும் சரி வங்கி வழங்கக்கூடிய இணைப்பு - 1 எனப்படும் குறிப்பிட்ட படிவத்தை நிரப்ப வேண்டும்.  வங்கி கணக்கு அல்லாத வாடிக்கையாளர் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு வரும்போது, ​​அவர்கள் தங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை வங்கியில் வழங்க வேண்டும்.  இதுதவிர கூடுதலாக, தனிநபர்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், NREGA அட்டை, பான் அட்டை அல்லது தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டால் வழங்கப்பட்ட கடிதம் போன்ற ஏதேனும் ஒரு அடையாள சான்றை வழங்கவேண்டும்.  அடுத்ததாக கோடக் மஹிந்திரா வங்கியில், ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற செல்லும் வாடிக்கையாளர்கள் கரன்சி நோட்டுக்களை மாற்றுவதற்கான சிறப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்.  இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கும் இந்த முறை பொருந்தும்.  அந்த படிவத்தில் கரன்சி நோட்டுக்களை மாற்றும் வாடிக்கையாளரின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.  வங்கி அல்லாத வாடிக்கையாளர்களும் செல்லுபடியாகும் அடையாளச் சான்று வழங்க வேண்டும்.


Induslnd வங்கியில் ரூ.2000 நோட்டுக்களை மாற்ற வேண்டுமென்றால் அனைத்து வாடிக்கையாளர்களும் வங்கி வழங்கக்கூடிய ஒரு சிறப்பு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.  வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பெயர், மொபைல் எண், முகவரி மற்றும் அடையாளச் சான்று ஆகியவற்றை வழங்க வேண்டும்.  அடுத்ததாக ஐசிஐசிஐ வங்கிக் கிளைகளில் ரூ.2000 கரன்சி நோட்டுக்களை மாற்ற செல்லும் வாடிக்கையாளர்கள் எவ்வித சிறப்புப் படிவத்தையும் நிரப்ப வேண்டியத்தேவையில்லை என்றாலும், வங்கி கணக்கு அல்லாத வாடிக்கையாளர்கள் ரொக்க டெபாசிட் சீட்டைப் பூர்த்தி செய்து, தங்கள் மொபைல் எண்ணுடன், அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணத்தை வழங்க வேண்டும்.


மேலும் படிக்க | தபால் துறை சிறு சேமிப்பில் முதலீடு செய்ய விதி மாற்றம்... என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ