5, 10, 100 ரூபாய் நோட்டு இனி செல்லாதா? RBI வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

100, 10, 5 ரூபாயின் பழைய வரிசை நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக வெளியான தகவல் தவறானது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
RBI Latest News: மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் ரூ .100, ரூ .10, மற்றும் ரூ .5 உள்ளிட்ட பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் பி.மகேஷ் சமீபத்தில் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் முதல் பழைய நோட்டுகள் செல்லாது என்ற செய்திகளை இந்திய ரிசர்வ் (Reserve Bank) வங்கி மறுத்துள்ளது. 5, 10 மற்றும் 100 உள்ளிட்ட ரூபாய் நோட்டு ஆகியவற்றின் பழைய தொடர் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவது குறித்த ஊடக அறிக்கைகள் தவறானவை என்று மத்திய வங்கி ஒரு ட்விட்டர் அறிக்கையில் தெளிவுபடுத்தியது.
ALSO READ | SBI-யின் எந்த கார்டில் எவ்வளவு பணம் எடுக்க முடியும்? முழு விவரம் உள்ளே
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது (Demonetisation) என பிரதமர் நரேந்திர மோடி (PM Narendr Modi) அறிவித்தார். இதனால் பொதுமக்கள் ஏடிஎம் வாசலில் காத்துக்கிடந்து பெரும் அவதிப்பட்டனர். புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. இவை இப்போது புழக்கத்தில் இருக்கின்றன.
தற்போது புழக்கத்தில் இருக்கும் 100 ரூபாய் நோட்டுகளையும் மார்ச் மாதத்துக்கு மதிப்பிழக்க செய்ய மத்திய அரசு (Central Government) திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வேகமாக பரவியது.
இந்நிலையில் தற்போது 100, 10, 5 ரூபாயின் பழைய வரிசை நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக வெளியான தகவல் தவறானது என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பழைய வரிசை ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெரும் திட்டம் ஏதும் இல்லை என்று ரிசர்வ் வங்கி பதிவு செய்துள்ளது.
ALSO READ | உங்களிடம் SBI டெபிட் கார்டு இருக்கா?.. அப்போ உடனே இதை செய்யுங்கள்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR