Demonetization 5th Anniversary: கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு Demonetization எனப்படும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒரே இரவில் அமலுக்கு கொண்டு வந்ததுக்கு. அன்றைய தினம் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன. மேலும் இந்த ரூபாய் நோட்டுக்களுக்கு மாற்றாக புதிதாக அச்சிடப்பட்ட 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் காரணமாக வங்கிகளிலும், ஏடிஎம் மெஷின் முன்பாகவும் நீண்ட நெடிய கூட்டம் வரிசைகட்டி நின்றன. மேலும் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை (Demonetization) வைத்திருப்பது சட்டவிரோதம் எனவும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவில் கருப்புப் பணத்தை (Black Money) ஒழிக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான் பிரதமர் நரேந்திர மோடி வரலாறு காணாத பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார்.


ALSO READ | 500 and 1000 rupee notes: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பற்றிய முக்கிய செய்தி


இந்நிலையில் தற்போது பணமதிப்பிழப்பு அறிவித்து இன்றுடன் 5 வருடம் முடிவைக்கிறது.இந்தியாவில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 5 வருட காலம் அடுத்த சில நாட்களில் முடியும் வேளையிலும் மக்களிடம் பணமாக இருக்கும் பணத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.


இந்த நடவடிக்கைக்குப் பிறகு, பொருளாதாரத்தில் பண நோட்டுகள் புழக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) அறிக்கைப்படி, 


* கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 4-ஆம் தேதி ரூ.17.74 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.


* பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் ரூ.7.8 லட்சம் கோடியாகக் பொதுமக்களின் பணம்  குறைந்தது.


* அக்டோபர் 23, 2020 அன்று இரண்டாவது வாரத்தின் முடிவில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொதுமக்களின் பணம் ரூ.15,582 கோடி அதிகரித்துள்ளது. இது அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 8.5 சதவீதம் அல்லது ரூ.2.21 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.


* அக்டோபர் 8, 2021-ல் இரண்டாவது வாரத்தின் முடிவில் பொதுமக்களிடம் உள்ள பணம் அதிகபட்சமாக ரூ.28.30 லட்சம் கோடியாக இருந்தது. அதேபோல் கடந்த மாதம் 29-ஆம் தேதி நிலவரப்படி ரூ.29.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.2,28,963 கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன.


பொருளாதாரத்தில் நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ள அதே வேளையில், இணையவழி பணப் பரிவா்த்தனையும் அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் யுபிஐ வாயிலாக மட்டும் ரூ.7.71 லட்சம் கோடி மதிப்பிலான பணம் பரிவா்த்தனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | மத்திய அரசிடம் இருந்து ₹5 கோடி பரிசு பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR