புதுடெல்லி: சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மிகப் பெரிய அளவில் பலனளித்துள்ளன. தீபாவளியில் 72,000 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக வர்த்தகர்கள் அமைப்பு CAIT கூறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடில்லி: இந்த தீபாவளிக்கு நாட்டின் முக்கிய சந்தைகளில் சுமார் 72,000 கோடி ரூபாய் விற்பனையை பதிவு செய்துள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஐஐடி) (Confederation of All India Traders (CAIT)) தெரிவித்துள்ளது. CAIT இன் கூற்றுப்படி, இந்த ஆண்டு தீபாவளியின்போது சீனப் பொருட்கள் விற்பனைக்கு வரவில்லை, சீனப் பொருட்களைப் புறக்கணிக்க CAIT அழைப்பு விடுத்திருந்தது.


"இந்தியாவின் முன்னணி விநியோக மையங்களாகக் கருதப்படும் 20 வெவ்வேறு நகரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, தீபாவளி பண்டிகை விற்பனை சுமார் 72,000 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியது மற்றும் சீனாவுக்கு 40,000 கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டதாக கணிக்கப்படுகிறது" என்று CAIT இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, நாக்பூர், ராய்ப்பூர், புவனேஸ்வர், ராஞ்சி, போபால், லக்னோ, கான்பூர், நொய்டா, ஜம்மு, அகமதாபாத், சூரத், கொச்சின், ஜெய்ப்பூர், சண்டிகர் உள்ளிட்ட குறைந்தது 20 நகரங்கள் முக்கிய பொருள் விநியோக நகரங்களாக கொண்டு CAIT ஆய்வுகளை மேற்கொண்டது.


Read Also | Petrol Diesel Price: உங்கள் ஊரில் பெட்ரோல் - டீசல் விலை என்ன?


தீபாவளி பண்டிகை காலங்களில் வணிகச் சந்தைகளில் நிகழ்ந்த வலுவான விற்பனை எதிர்காலத்தில் நல்ல வணிக வாய்ப்புகளைக் குறிக்கிறது என்றும், வர்த்தகர்களின் முகங்களில் நம்பிக்கையின் கீற்று தென்படுவதாகவும் CAIT தெரிவித்துள்ளது.


FMCG பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், பொம்மைகள், மின்சார உபகரணங்கள் மற்றும் பொருட்கள், மின்னணு உபகரணங்கள், சமையலறை பொருட்கள் மற்றும் அவற்றின் பாகங்கள், பரிசு பொருட்கள், மிட்டாய் பொருட்கள், இனிப்புகள், வீட்டு அலங்காரம், பாத்திரங்கள், தங்கம் மற்றும் நகைகள், காலணி, கைக்கடிகாரங்கள், தளபாடங்கள், சாதனங்கள் , ஆடைகள், பேஷன் ஆடைகள், துணி, வீட்டு அலங்கார பொருட்கள் ஆகியவை தீபாவளியில் அதிகம் விற்பனையான பொருட்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கின்றன.  


இந்தியாவில் சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரச்சாரத்தை CAIT நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களுக்கு சில நாட்களுக்குப் பிறகு, அனைத்து சீன நிறுவனங்களையும் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR