7th Pay Commission Latest News Today: சிஐஎஸ்எஃப், சிஆர்பிஎஃப், சிஏபிஎஃப் போன்ற மத்திய ஆயுதப்படை காவல்துறை ஊழியர்களுக்கு ஊதிய பாதுகாப்பு அளித்த பின்னர், மத்திய அரசு தற்போது டெபுடேஷன் அதானது பிரதிநிதித்துவப் பணிகளில் உள்ள ஊழியர்களுக்கு ஊதிய பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் 10 தேதியிட்ட DoPT அறிவிப்பு, ஒரு மத்திய அரசு ஊழியர் டெபுடேஷனில் இருந்து, மத்திய அரசு ஊழியர் (CGS) ஈட்டும் மாத சம்பளம் அவரது முந்தைய முதன்மை பணியிலிருந்து குறைவாக இருந்தால், அந்த ஊதிய வேறுபாட்டுக்கு மத்திய அரசு (Central Government) பாதுகாப்பு அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியப் பாதுகாப்பை அறிவித்த DoPT அறிவிப்பு, "மத்திய பணியாளர் திட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் ஊதியம், திருத்தப்பட்ட ஊதிய கட்டமைப்பில் அவர்களின் ஊதியத்தை நிர்ணயித்த பின்னர், இந்த விதிகளின் கீழோ, அல்லது அவர்கள் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட பதவியில் அத்தகைய ஊதியத்தை நிர்ணயிப்பதை ஒழுங்குபடுத்தும் அறிவுறுத்தல்களின்படியோ, அவர்களது முந்தைய பணியில், அவர்கள் வாங்கி இருக்கக்கூடிய ஊதியத்திலிருந்து குறைவாக இருந்தால், அந்த ஊதியத்தில் உள்ள வேறுபாட்டிற்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும். இது குறித்து அரசாங்கத் தீர்மானம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து, அதாவது, 2016, ஜூலை 25 முதல், இந்த ஊதிய (Salary)  பாதுகாப்பு தனிப்பட்ட ஊதிய வடிவத்தில் அளிக்கப்படும். "


"மேலும், மத்திய பணியாளர் திட்டத்தின் கீழ் மத்திய பிரதிநிதியாக இருக்கும்போது ஊழியர் சேவையில் உறுப்பினராக பதவி உயர்வு பெற்றிருந்தால், அந்த ஊதியத்தில் உள்ள வேறுபாடு, அவரது முந்தைய பணியிட பதவி உயர்வுக்கு ஏற்ப சரிபார்க்கப்பட்டு, அதற்கான பாதுகாப்பும், அரசாங்கத் தீர்மானம் வழங்கப்பட்ட நாளிலிருந்து தனிப்பட்ட ஊதிய வடிவில் அளிக்கப்படும்” என்று DoPT அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ALSO READ: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட், 32% DA hike கிடைக்கும்: நிபுணர்கள்


ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு Supreme Court அளித்த மிகப்பெரிய நிவாரணம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR