புதுடெல்லி: 7th Pay Commission: கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் DA மற்றும் DR பெற நீண்ட காலமாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும், இது 2021 ஜூலை 1 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 1 முதல் நிறுத்தப்பட்ட DA கிடைக்கும்
கொரோனா (Coromavirus) தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு 2020 ஜனவரி 1, 2020 ஜூலை 1 மற்றும் 2021 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் DA மற்றும் DR ஐ மோடி அரசு நிறுத்தியது. இப்போது 2021 ஜூலை 1 ஆம் தேதி திருத்தப்பட்ட விகிதத்தில் அவை மீண்டும் தொடங்கப்படும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இது 50 லட்சம் மத்திய ஊழியர்களுக்கும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு பெரிய நிவாரண செய்தி. ஊடக அறிக்கைகளில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, தற்போது ஊழியர்களுக்கு DA, DR 17 சதவீத விகிதத்தில் கிடைக்கிறது, இது 28 சதவீதமாக அதிகரிக்கக்கூடும்.


ALSO READ | 7th Pay Commission: இந்த ஊழியர்களின் பதவி உயர்வு பற்றி தெளிவுபடுத்தியது மத்திய அரசு


DA அதிகரிப்பு பலனளிக்கும்
கடந்த மாதத்திலேயே, நிதியமைச்சர் அனுராக் தாக்கூர், ஜூலை 1 முதல், மத்திய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் DA இன் முழு பலன் கிடைக்கும் என்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தார். எனவே 2021 ஜனவரி முதல் ஜூன் வரை முடக்கப்பட்ட DA அதிகரிப்பின் பலனையும் அவர்கள் பெறுவார்கள்.


28 சதவீதம் DA அதிகரிக்கலாம்
AICPI  (அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) இன் சமீபத்திய தகவல்கள் 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் குறைந்தது 4% DA அதிகரிக்கலாம். 2020 ஜனவரி முதல் ஜூன் வரையிலான 3% DA  (Dearness Allowance) மற்றும் ஜூலை முதல் டிசம்பர் 2020 வரை அறிவிக்கப்பட்ட 4% DA ஆகியவை தற்போதுள்ள மத்திய ஊழியர்களின் DA இல் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது தற்போது 17% ஆகும். அதாவது, மொத்தம் (17 + 3 + 4) 24 சதவீதம். கடந்த ஆண்டு, அமைச்சரவை DA இல் 4% அதிகரிப்புக்கு ஒப்புக்கொண்டது, அதாவது மொத்தம் 28% DA அதிகரிக்கலாம்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR