ஹரியானா மாநிலத்திலும் அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் அரசுப் பணியாளர்கள்! DA 4% ஹைக்
DA hike By State Govt: மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மாநில அரசுப் பணியாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன
அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசை அடுத்து, மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஹரியானா DA உயர்வு: ஹரியானா மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்துவதாக ஹரியானா மாநில முதல்வர் ஸ்ரீ மனோகர் லால் கட்டார் அரசு அறிவித்துள்ளது.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (Haryana DA Hike) நான்கு சதவீதம் உயர்த்துவதாக அறிவித்தார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்று கூறிய அவர், இந்த முடிவை மனதில் வைத்து ஹரியானா அரசும் தீபாவளிக்கு முன் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.
ஜூலை மாதம் முதல் கூடுதல் DA
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1, 2023 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் கட்டார் கூறினார். ஹரியானாவில் உள்ள சுமார் 3.5 லட்சம் ஊழியர்கள் இந்த முடிவால் பயனடைவார்கள். ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் அரசு பதவியேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய கட்டார் அகவிலைப்படி அதிகரிப்பு தொடர்பான இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர், தமது அரசாங்கம் மேற்கொண்டுள்ள நலத்திட்டங்கள் குறித்தும் விரிவாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. DA ஹைக் பரிசு கிடைக்கும்
9 ஆண்டுகளில் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரித்துள்ளது?
தனது அரசின் சாதனைகளைப் பற்றிக் குறிப்பிட்ட முதல்வர் மனோகர் லால் கட்டார், 2014 அக்டோபருடன் ஒப்பிடுகையில், 2023 அக்டோபரில் பிபிஎல் ஆண்டு வருமான வரம்பு ரூ.1,20,000-லிருந்து ரூ.1.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இது தவிர சமூக பாதுகாப்பு ஓய்வூதியமும் மாதம் 1000 ரூபாயில் இருந்து 2750 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழக அரசு டிஏ ஹைக்
தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவதாக நேற்று (புதன்கிழமை) அறிவித்தது. ஜூலை 1 ஆம் தேதி, 2023 முதல் அமலுக்கு வரும் என அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வெளியிட்ட அறிவிப்பு தெரிவித்துள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு, தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 42-ல் இருந்து 46 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படியை உயர்த்திய அரசு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 48 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 46 சதவீதமாக உயர்த்துவதற்கு, மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்த நிலையில், இந்த அகவிலைப்படி உயர்வானது, ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது.
மாத ஊதியம் வாங்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இப்போது அகவிலைப்படியின் புதிய விகிதங்கள் அக்டோபர் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். இதில் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத பணத்திற்கான நிலுவைத் தொகையும் அடங்கும். ஆண்டின் இரண்டாம் பாதியிலும் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. 4 சதவீத உயர்வுடன், அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கான தீபாவளிக்கு முன் டபுள் ஜாக்பாட், 4% டிஏ ஹைக்குடன் இதுவும்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ