புதுடெல்லி: இரவு நேரத்தில் பணி புரிபவர்களுக்காக மத்திய அரசு மிகப் பெரிய முடிவை எடுத்திருக்கிறது. இது ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக வந்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7 வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட பின்னர், இரவு பணிபுரிபவர்களுக்கான அலவன்ஸ் பற்றி மத்திய அரசு கலந்தாலோசனை நடத்தியது.  அதன்படி, இரவு நேர பணிகளுக்காக கொடுப்பனவு விதிகளை மாற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 


இந்த மாற்றப்படும் விதிகள் இரவில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும். அடிப்படை சம்பளம் 43,600 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு இரவு பணிக்கான கொடுப்பனவு தொடர்பான விதிகள் மாற்றப்படுகிறது. 


Also Read | உங்களிடம் இந்த ஒரு ரூபாய் நாணயம் இருக்கிறதா? இதோ 10 கோடி பிடியுங்கள் கோடீஸ்வரரே!  


இது தொடர்பாக இந்திய  ரயில்வே துறை இப்போது பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறைக்கு (Department of Personnel and Training (DOPT)) கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.


இரவு பணிக்கான அலவன்ஸ் நிறுத்தப்பட்டது
இந்த விஷயம் தொடர்பாக பேசிய வடக்கு ரயில்வேயின் டெல்லி பிரிவின் பொதுச் செயலாளர் அனூப் சர்மா, இந்திய ரயில்வே தற்போது இரவு பணிக்கான அலவன்ஸ் கொடுப்பதை நிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய ரயில்வே தொழிற்சங்கங்கள், இரவு நேர பணிக்கான அலவன்ஸ் வழங்கப்படாவிட்டால், அவருக்கு இரவுப் பணி கொடுக்கக்கூடாது என்ற வாதத்தை முன்வைத்தது.  


கணக்கீடு விதிகளில் மாற்றங்கள்
இரவு பணிக்கான அலவன்ஸ் கணக்கிடுவதற்கான விதிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய முறை உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. நைட் டூட்டி அலவன்ஸைக் (Night Duty Allowance) கணக்கிடுவதற்கு ஒரு சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது, இது (Basic Salary + DA / 200) சூத்திரத்தின் அடிப்படையில் செய்யப்படும். இது அனைத்து அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கும் பொருந்தும்.


Also Read | சூயஸ் கால்வாய் டிராஃபிக் ஜாமுக்கு காரணம் என ட்ரோலான கேப்டன்


அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் இரவு பணிக்கான அலவன்ஸ் கணக்கீடு தனித்தனியாக செய்யப்படும். இப்போது Grade Aவின் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாகவே இரவு பணிக்கான அலவன்ஸ் வழங்கப்பட்டது. இனிமேல் இது தனித்தனியாக கணக்கிடப்படும்.


நைட் டியூட்டி அலவன்ஸ் யாருக்கு கிடைக்கும்? 
ஊழியர்களின் மேற்பார்வையாளர் வழங்கிய சான்றிதழின் அடிப்படையில் ஒரு ஊழியர் எவ்வளவு நாட்கள் இரவு பணிகள் செய்துள்ளார் என்பது கணக்கிடப்படும். ஒரு ஊழியர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரியும் போது மட்டுமே இரவு பணிக்கான அலவன்ஸ் வழங்கப்படும்.


Also Read | பழைய மற்றும் அழித்த WhatsApp செய்திகளை மீண்டும் கொண்டுவர Tips and Tricks


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR