8வது ஊதியக்குழுவில் UPS மூலம் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: கணக்கீடு இதோ
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான உத்தரவாத வாழ்நாள் ஓய்வூதியத் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS), ஏப்ரல் 1, 2025 முதல் தொடங்கும். இந்தத் திட்டம், ஊழியர்கள் கடைசி 12 மாதங்களில் பெற்ற சம்பளத்தின் சராசரியில், 50% வரை நிலையான ஓய்வூதியத்தை வழங்குகிறது. தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் யுபிஎஸ் ஆகியவற்றிற்கு இடையே தேர்ந்தெடுக்கும் விருப்பம் பணியாளர்களுக்கு இருக்கும். UPS, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் நிதி ஸ்திரத்தன்மையை வழங்குகிறது.
UPS -இல் 8வது ஊதியக் குழுவின் தாக்கம்
8வது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டு 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு 8வது ஊதியக்குழுவை அரசு அமல்படுத்த வேண்டும். அதற்கான அறிவிப்பு இப்போது வந்தால்தால் அது சாத்தியப்படும்.
மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) ஓய்வூதியத்தை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் பெருக்கியான ஃபிட்மென்ட் ஃபாக்டர், யுபிஎஸ் -இன் கீழ் பணம் செலுத்துவதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஃபிட்மென்ட் ஃபாக்டரில் கணிக்கப்பட்ட மாற்றங்கள்
- 7வது ஊதியக் குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: 2.57
- 8வது ஊதியக் குழுவில் கணிக்கப்பட்டுள்ள ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: அறிக்கைகள் 1.92 ஃபிட்மெண்ட் ஃபாக்டரை கணித்துள்ளன, ஆனால் நிபுணர்கள் 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பரிந்துரைக்கின்றனர்.
மேலும் படிக்க | அதிக வட்டி விகிதங்களை அளிக்கும் அரசாங்க வங்கிகள்: வட்டி விவரம் இதோ
Minimum Salary: 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தீர்மானிக்கப்பட்டால் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் எவ்வளவு இருக்கும்?
- குறைந்தபட்ச சம்பளம்: ரூ.51,480 (தற்போது இது ரூ.18,000 ஆக உள்ளது)
- குறைந்தபட்ச ஓய்வூதியம்: ரூ.25,740 (தற்போது இது ரூ.9,000 ஆக உள்ளது)
UPS Pension Structure: யுபிஎஸ் ஓய்வூதிய அமைப்பு
- குறைந்தபட்ச ஓய்வூதியம்: குறைந்தபட்சம் 10 வருட சேவையுடன் ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.10,000.
- வாழ்க்கைத் துணைக்கு கிடைக்கும் நன்மைகள்: ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால் ஓய்வூதியத்தில் 60% கிடைக்கும்.
- விகிதச் சார்பு ஓய்வூதியம்: 25 ஆண்டுகளுக்கும் குறைவான சேவையில் உள்ள ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்காலத்திற்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
- முழு ஓய்வூதியத் தகுதி: குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
UPS குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. எனினும், இதற்கான இறுதியான கணக்கீடுகள் அரசாங்க முடிவுகள் மற்றும் 2026 ஆம் ஆண்டில் 8வது ஊதியக் குழுவின் அமலாக்கம் ஆகியவற்றைப் பொறுத்தது. அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை அடைவதற்கான சமநிலையான அணுகுமுறையை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.
லும் படிக்க | SIP Calculator: ரூ.50,000 முதலீட்டை ரூ.5 கோடியாக்கும் 40x20x50 பார்முலா...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ