8th Pay Commission Latest News: நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும். இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒரு முக்கிய விஷயம் பற்றிய பேச்சுகள் கிளம்பியுள்ளன. பல்வேறு ஊடக செய்தியறிக்கைகளில், புதிய அரசாங்கம் அமைந்த உடனேயே 8வது ஊதியக் குழு குறித்த நல்ல செய்தி மக்களுக்கு கிடைக்கும் என்ற தகவல்கள் வெளிவந்த வன்ணம் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக வந்துள்ளது. 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால், அதன் பிறகு அரசு ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு கிடைக்கும். இதற்காக ஊழியர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய சம்பள சீராய்வு ஆணையம் அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி, நிலுவையில் உள்ள பல பிரச்னைகளுக்கு தீர்வு காண 8வது ஊதியக் குழுவை அமைக்கக் கோரியுள்ளது. இதற்கிடையில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Do&PT) இந்தக் கடிதத்தை மேலதிக நடவடிக்கைக்காக செலவினத் துறைக்கு (நிதி அமைச்சகம்) அனுப்பியுள்ளது. ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு பொறுப்பான செலவின அமைச்சகம், கடிதத்தில் எழுதப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


7வது ஊதியக்குழு எப்போது உருவாக்கப்பட்டது?


தற்போது அமலில் இருக்கும் 7வது ஊதியக்குழு (7th Pay Commission) 2014ல் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 2016ல் அமலுக்கு வந்தன. 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்ட உடனேயே, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் சுமார் 23 சதவீதம் உயர்த்தப்பட்டது. பொதுவாக, 10 வருடங்களுக்கு ஒரு முறை, மத்திய ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. இருப்பினும் அப்படித்தான் அமைக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஊதியக்கமிஷன் என்றால் என்ன? 


பொதுவாக, ஊதியக் குழுவானது மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம், அலவன்சுகள் மற்றும் பிற வசதிகள்/பயன்கள்/ உள்ளிட்ட ஊதியக் கட்டமைப்பை நிர்வகிக்க வேண்டிய கொள்கைகள் தொடர்பான மாற்றங்களை ஆய்வு செய்து, மதிப்பாய்வு செய்து, பரிந்துரை செய்கிறது. இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள மற்றும் ஓய்வூதிய கட்டமைப்பு வடிவமைக்கப்படுக்கின்றது.


மேலும் படிக்க | வங்கிகளை மிஞ்சும் NBFC... வட்டியை அள்ளித் தரும் FD முதலீடுகள்!


8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை என்ன?


- இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் கடிதத்தில் புதிய மத்திய ஊதியக் குழுவை அமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.


- பல மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. 


- ரயில்வே ஊழியர்கள் சங்கம் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள், பணி நிலைமைகள், பதவி உயர்வு வழிகள் மற்றும் பிந்தைய வகைப்பாடுகள் தொடர்பான அனைத்து முரண்பாடுகளையும் அகற்ற ஊதியக் குழுவிற்கு போதுமான நேரத்தை ஒதுக்க விரும்புகிறது.


- இந்த செயல்முறையின் போது அனைத்து தரப்பினரையும் அதில் ஈடுபடுத்தி அவர்களின் கருத்துகளையும் பெறுமாறு IRTSA மையத்தை வலியுறுத்தியுள்ளது.


அடிப்படை சம்பளம் எவ்வளவு உயரும்?


7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி, ஃபிட்மென்ட் ஃபாக்டர் (Fitment Factor) 2.57 மடங்கு உயர்த்தப்பட்டு, அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாற்றியமைக்கப்பட்டது. 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு அதிகரிக்கப்படலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறைந்தபட்ச சம்பளம் தற்போதுள்ள ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26,000 ஆக அதிகரிக்கலாம்.
 
மேலும் படிக்க | குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ