அதிரடியாய் உயரப்போகும் UPS ஓய்வூதியம்: காரணம் 8வது உதியக்குழுவா? அசத்தலான அப்டேட் இதோ
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவுக்கான காத்திருப்பு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 8வது ஊதியக் குழுவின் கீழ் ஊழுயர்கள் தங்கள் சம்பளம் மற்றும் UPS மூலம் பெறும் ஓய்வூதியம் இரண்டிலும் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.
8th Pay Commission: மத்திய அரசு பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் கிடைத்துள்ளன. 8வது ஊதியக் குழுவுக்கான காத்திருப்பு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாங்கம் வெளியிடவில்லை என்றாலும், 2026 ஆம் ஆண்டில் 8வது ஊதியக் குழு அறிமுகப்படுத்தப்படலாம் என்று பல ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வந்து குழு அமைக்கபப்டும் என கூறப்படுகின்றது.
8வது ஊதியக் குழுவின் கீழ் ஊழுயர்கள் தங்கள் சம்பளம் மற்றும் UPS மூலம் பெறும் ஓய்வூதியம் இரண்டிலும் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் இதில் கிடைக்கவுள்ள நன்மைகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Unified Pension Scheme: ஓய்வூதியத்தில் பாதி யுபிஎஸ் மூலம் பாதுகாப்பாக இருக்கும்
2025 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் சராசரி சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாகப் பெறுவார்கள். ஓய்வூதியம் பெறுபவர், கடைசி ஒரு ஆண்டில் பெற்ற சராசரி சம்பளத்தில் பாதியை மாதாந்திர ஓய்வூதியமாகப் பெறுவார் என்பதை இது குறிக்கிறது. தற்போது, UPS ஓய்வூதியம் விரிவடையும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 8வது ஊதியக் குழு மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் வரவிருக்கும் மாற்றங்களை மனதில் கொண்டு பார்த்தால், ஓய்வூதியத்தில் நல்ல ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | EPF Corpus Calculator: 30 ஆண்டுகளுக்கு ஓய்வூதிய நிதியை இத்தனை கோடியாக மாற்றலாமா!
Salary Hkike, Pension Hike: 8வது ஊதியக் குழுவைத் தொடர்ந்து யுபிஎஸ் மாற்றங்கள் இருக்கும்
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை (Pension) உயர்த்த 8வது ஊதியக் குழுவின் கீழ் அரசாங்கம் புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டரை (Fitment Factor) அறிமுகப்படுத்தக்கூடும். 7வது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. ஆனால் அது வரவிருக்கும் 8வது ஊதியக் குழுவில் 1.92 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய உயர்வு: குறைந்தபட்ச அடிப்படைஊதியம்
எனினும், சில ஊடக அறிக்கைகள் அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.86 ஆக உயர்த்தலாம் என்றும் கூறுகின்றன. அப்படி நடந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் (Minimum Basic Salary) ரூ.18,000 இல் இருந்து ரூ.51,480 ஆக உயரக்கூடும். இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.
Pension Hike: ஓய்வூதிய உயர்வு
ஊழியர்கள் மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களுக்கும் இதனால் நல்ல பலன் கிடைக்கும். ஓய்வூதியத்தில் 186% அதிகரிப்பும் சாத்தியமாகும். தற்போது ரூ.9,000 ஆக உள்ள ஓய்வூதியம் ரூ.25,740 ஆக அதிகரிக்கலாம். ஆனால், இதுவரை அரசு தரப்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.இதன் அடிப்படையில் யுபிஎஸ் மூலம் பெறப்படும் ஓய்வூதியமும் வளர்ச்சி காணக்கூடும்.
7th Pay Commission: 7வது உதியக்குழு
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் 2016 முதல் அமல்படுத்தப்பட்டன. இதில் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இப்போது அடுத்த ஊதியக்குழுவான 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், அதனால், மத்திய அரசின் 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க இந்த வருவாய் உயர்வு அவர்களுக்கு உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)
மேலும் படிக்க | Budget 2025: வருமான வரி உள்ளிட்ட பல பெரிய சீர்திருத்தங்கள்.. தயாராகும் அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ