நிதி சுதந்திரம் வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான்
Financial Planning : நாட்டின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நிதி சுதந்திரம் பெறுவது எப்படி என ஃபண்ட்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் கிரிராஜன் முருகன் கொடுத்திருக்கும் வழிகாட்டல் இங்கே.
Financial Planning : நாட்டின் 78வது சுதந்திர தின விழாவை வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியோடும் கொண்டாடியிருக்கும் இந்த நேரத்தில் நமது தேசத்தின் பிரமிக்கத்தக்க வெற்றிகரமான பயணத்தை திரும்பிப் பார்ப்பதற்கான ஒரு கணத்தை நாம் செலவிடுவோம். 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று நள்ளிரவில், விதியோடு இந்தியாவின் சந்திப்பு நிகழ்ந்ததை நீங்கள் அறிவீர்களா?, இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த தருணத்திலிருந்து வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சுய சார்புநோக்கி நமது நாடு தனது வெற்றிப்பயணத்தை தொடங்கியது. நாம் சுதந்திரம் பெறவில்லை என்றால், இன்றைய தினத்தில் நமது வாழ்க்கை எந்தவிதமாக மாறியிருக்கும் என்பதை கற்பனை செய்து பார்ப்பது மிகவும் வசீகரமான உணர்வைத் தருகிறது.
நிதி தொடர்பானவற்றில் இதே அளவு சுதந்திரத்தை நாம் அனுபவித்திருப்போமா? எந்தவிதமான வரி விதிப்புகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளால் நாம் நிர்வகிக்கப்பட்டிருக்கக்கூடும்?. இத்தகைய கேள்விகள் நமது ஆர்வத்தை தூண்டுவதோடு மட்டுமல்லாமல், இன்றைய தினத்தில் நாம் சுதந்திரமாக செயல்படுவதின் முக்கியத்துவத்தையும் குறிப்பிடத்தக்க வகையில் எடுத்துக்காட்டுகின்றன..
நாம் சுதந்திரம் பெறாமல் இருந்திருந்தால், நமது நாட்டின் நிதி அமைப்புக்கள் முற்றிலும் மாறுபட்டு இருந்திருக்கும். நமது தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நமது நிதி வாழ்க்கையை மேம்படச்செய்வதில் நமக்கிருக்கும் சுதந்திரம், காலனி ஆதிக்க கொள்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். நிதி சுதந்திரம் என்ற கருத்தே நமக்கு அந்நியமாகிவிட்டிருக்கக் கூடும் என்பதோடு, முதலீடுகள் மூலம் செல்வத்தை பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் நமக்கு மறுக்கப்பட்டிருக்கும். அதிருஷ்டவசமாக நமது நிதி எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளும் ஒரு சுதந்திர இந்தியாவில் வாழும் வாய்ப்பு கிடைத்ததற்காக, நாமெல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்.
இந்த சுதந்திர உணர்வுடன் ஒன்றிணைந்து, நமது நிதி வாழ்க்கையை பாதுகாப்பதில் முதலீட்டுச் செயல்பாடுகள் வகிக்கும் பங்கை அடையாளம் காண்பது மிகவும் அவசியமாகும். முதலீடுகள் என்பது செல்வத்தைப் பெருக்குவதற்கான ஒன்று மட்டுமல்ல; அது நமது குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை கட்டமைத்தல், நமது எதிர்காலத்துக்கு திட்டமிடல் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நமது பங்கை அளித்தல் ஆகியவையும் உள்ளடக்கியதாகும். நமது முன்னோர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள்; அவர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை ஆக்கசிந்தனையோடு பயன்படுத்துவதுவதே இப்போது நமது கடமையாகும்.
முதலீடுகளை எந்த ஒரு யுக்திபூர்வமாக வழிமுறைகளிலும் மேற்கொள்வது அவர்களின் தியாகத்தை கௌரவிப்பதோடு, தேசத்தின் வளர்ச்சிக்கும் நாம் பங்களிப்பதாகவும் அமையும். இந்தியாவின் நிதிப் பயணம் நமக்கு கற்றுத்தந்த அனைத்து மதிப்புமிக்க பாடங்களையும் எடுத்துக் கூறுமாறு என்னிடம் கேட்டீர்களானால், அதற்கான பதில் இங்கே:
பல்முனைப்படுத்தல்: சுகந்திரத்திற்கு பிறகு இந்தியா தனது பொருளாதார நடைமுறைகளை பல்முனைப்படுத்தி வளர்ச்சி கண்டு வளம் பெற்றதைப் போல, தனிநபர்களும் தங்களது முதலீட்டுத் திட்டங்களின் உடைமைப் பட்டியலை பல்முனைப்படுத்த வேண்டும். இது ஆபத்துக்களை மட்டுப்படுத்தி, நிலையான, சீரான வளர்ச்சியை உறுதி செய்கிறது.
நீண்டகால தொலைநோக்குப் பார்வை : இந்தியாவின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடனான கொள்கைகள் வலிமையான, நிலையான வளர்ச்சியை நோக்கிய இயக்கத்துக்கு வித்திட்டது. அதேபோல் நிதி தொடர்பான திட்டமிடலில், உணர்வுகளால் உந்தப்பட்டு குறுகியகால குறியிலக்குகளை தேர்ந்தெடுப்பதை தவிர்த்து, நீண்டகால குறியிலக்குகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
தகவமைத்துக் கொள்ளும் திறன் : உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு இணக்கமாக தகவமைத்துக் கொள்ளும் இந்தியாவின் திறன் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்பதோடு, புதிய வெற்றிச் சிகரங்களை எட்டிட, தனிநபர்களும் தகவல் அறிந்தவர்களாக சந்தையின் ஏற்றத் தாழ்வுகள், போக்குகள் , பொருளாதார மாற்றங்களுக்கு உகந்த வகையில் தங்களை தகவமைத்துக் கொண்டு நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
முதலீடுகளை செய்வது ஒருகாலத்தில் மிகவும் சிக்கலான ஒரு நடவடிக்கையாக இருந்தது, ஆனால் தொழில்நுட்ப துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி கண்டுள்ளதால், நமது வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டே முதலீடுகளை மேற்கொள்ளும் வசதியை அனுபவித்து மகிழும் வாய்ப்பை நமக்கு வழங்கியுள்ளது. தொழில்நுடப் நிபுணர்களாகத் திகழும், அதே சமயம் எதிர்கால நிதி பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து அறியாமலிருக்கும் தற்கால GenZ ஐ காணும்போது உற்சாகமாகவும் அதே சமயம் கவலையளிக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.
நமக்கிருக்கும் நிதி முதலீடு தொடர்பான அறிவும் நுண்ணறிவும் அடுத்த தலைமுறையினருக்கு புகட்டுவது முக்கியம். அதேவேளையில், அவர்களிடமிருந்து தொழில்நுட்ப நிபுணத்துவத்தை நாம் கற்றுக்கொள்வதும் அவசியம்.. தொழில்நுட்ப ஆற்றல் மற்றும் நிதி தொடர்பான மதி நுட்பம் இரண்டையும் ஒருங்கிணைத்து முதலீட்டு நடைமுறைகளை ஒழுங்கமைத்து முதலீட்டுக்கான சிறப்பான, தகவலளிக்கப்பட்ட முடிவுகளை நம்மால் மேற்கொள்ள முடியும்.
சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் இந்த வேளையில், சுதந்திரத்திற்காக மேற்கொண்ட போராட்டங்கள் இப்போது நிதி சுதந்திரத்தை அடைவதற்கான ஒவ்வொரு இந்தியனின் போராட்டமாக நீட்டித்திருப்பதை நாம் மீண்டும் ஒருமுறை நினைவுகூறுவோம், அதுவே ஃபண்ட்ஸ் இந்தியாவின் Making India Wealthier (இந்தியாவை வளப்படுத்துவோம்) என்ற செயல் இலக்கு அறிக்கையின் மையக் கருத்தாக விளங்குகிறது.
நிதி பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வெற்றிக்கொள்ள நாம் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதற்கான ஒரு உகந்த நேரம் இது. முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் பலன்களை நாமே பெறுவதோடு அதை மற்றவர்களும் பெற உதவிசெய்து, மேலும் அதிகளவிலான இந்தியர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள நாம் உறுதி செய்ய முடியும். ஆகவே, முதலீடுகளை நாம் புத்திசாலித்தனமாக மேற்கொள்வதன் மூலம், நமது சுதந்திரத்தை நாம் சரியாகப் பயன்படுத்துவோம், சரியான செயல்களை மேற்கொள்வோம், மற்றும் நிதி சுதந்திரத்தை அடைவதில் வெற்றி காண்போம். நமக்காகவும், நமது குடும்பத்தினருக்காகவும் மற்றும் நமது நாட்டிற்காகவும், சுதந்திர தின வாழ்த்துக்கள்! ஜெய் ஹிந்த்.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ