அதானி மீண்டும் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர்..! 10 பில்லியன் டாலர் அதிகரிப்பு
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை பிடித்துள்ளார் தொழிலதிபர் அதானி. அவரின் சொத்து மதிப்பு கடந்த 45 நாட்களுக்குள் 10 பில்லியன் டாலர் அதிகரித்திருக்கிறது.
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் மீண்டும் கௌதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 30-45 நாட்களுக்குள் அவரது சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் பட்டியல் படி, கௌதம் அதானி சொத்து மதிப்பு 97.6 பில்லியன் டாலராக உள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 97.0 பில்லியன் டாலராக உள்ளது. அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட குற்றச்சாட்டுகளின் காரணமாக கடந்த சில மாதங்களாக அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சரிவடைந்தது. இதனால் கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் குறைந்தது.
ஆனால், கடந்த ஒரு மாதத்தில் அதானி குழுமத்திற்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியது. இதனால் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு மீண்டும் உயர்ந்தது. இதன் விளைவாக கௌதம் அதானி மீண்டும் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனார். அதானி குழுமம் இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாகும். இது ஆற்றல், போக்குவரத்து, துறைமுகம், விமான போக்குவரத்து, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. அதானி குழுமம் தொடர்ந்து வளர்ந்து வருவதால், கௌதம் அதானி பணக்காரர் பட்டியலில் மேலும் உயர்ந்த இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி இலங்கை, ஆஸ்திரேலியா, அரபிக் நாடுகள் ஆகியவற்றிலும் அதானி நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அண்மைக் காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது அதானி நிறுவனம். குறிப்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை, அந்த நிறுவனத்தின் பங்குகளில் பெரும் சரிவை உண்டாக்கியது. பங்குச் சந்தையில் இதனால் பெரும் பின்னடைவையும் சந்தித்தது. இருப்பினும் பல்வேறு வழிகளில் நிதியை திரட்டிய அதானி, தன்னுடைய இருப்பதை தக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்தார்.
உச்சநீதிமன்றத்திலும் அதானி நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால், மீண்டும் அவரின் பங்குகள் மற்றும் வர்த்தகம் சூடுபிடிக்க தொடங்கியது. இதனையடுத்து இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த அம்பானி குழுமத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்துக்கு முன்னேறினார். வரும் காலங்களிலும் அதானி சொத்து மதிப்பு உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஆதார் அட்டை முதல் வருமான வரி வரை... நீங்கள் முடிக்க வேண்டிய 7 முக்கிய வேலைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ