புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய எண்ணெய்  நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited-IOC) இன்று (ஞாயிற்றுக்கிழமை) சமான்ய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் 5 கிலோ குட்டி எரிவாயு சிலிண்டரை  இப்போது முகவரி ஆதாரம் ஏதும் இல்லாமல் வாங்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குட்டி எரிவாயு சிலிண்டரை வாங்க அடையாள அட்டையே போதும். IOC பெட்ரோல் பம்புகள் அல்லது இந்தேன் எல்பிஜி (Indane LPG) விநியோகஸ்தர்களிடமிருந்து குட்டி சிலிண்டரான 5 கிலோ சிறிய எரிவாயு சிலிண்டரை வாங்கலாம். 5 கிலோ சிறிய எரிவாயு சிலிண்டர்களை விநியோகஸ்தர்கள் வீட்டிற்கும் அனுப்பி வைக்கிறார்கள். அதாவது வழக்காமான எல்பிஜி சிலிண்டரை போல், இந்த குட்டி சிலிண்டர் ஹோம் டெலிவரியும் செய்யப்படுகிறது.


2020 டிசம்பரில், 5 கிலோ எடையுள்ள சிறிய எஃப்.டி.எல் சிலிண்டரை IOC அறிமுகப்படுத்தியது . 5 கிலோ சிறிய எரிவாயு குட்டி LPG சிலிண்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறைந்த விலை காரணமாக பொருளாதார ரீதியாக பிந்தங்கியுள்ள மக்களின் பட்ஜெட்டில் இது எளிதில் பொருந்துகிறது. 


சிலிண்டரை புக் செய்யும் விதம்
இந்தேனின் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான வழி மிகவும் எளிது. எல்பிஜி கேஸ் சிலிண்டரை வீட்டில் இருந்த படியே 5 வழிகளில் பதிவு செய்யலாம். வாட்ஸ்அப், மிஸ் கால், இந்தியன் ஆயில் ஆப், எஸ்எம்எஸ் மற்றும் இந்தியன் ஆயில் வாடிக்கையாளர் போர்டல் மூலம் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம்.


  • இந்தேனின் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்ய, எங்கிருந்து வேண்டுமானாலும் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால கொடுக்கலாம் .

  • வாட்ஸ்அப் மூலம் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்ய, மெசஞ்சரில் 'REFILL' என டைப் செய்து 7588888824 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

  • கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய 7718955555 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பி பதிவு செய்யலாம்.


சிறிய எரிவாயு சிலிண்டரின் எடை 5 கிலோ. அதன் விலையும் குறைவாகவே உள்ளது. அதை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதும் மிக எளிது.


ALSO READ | Work From Home: தொழிலாளர் நல அமைச்சகம் தயாரித்துள்ள புதிய சட்ட வரைவு..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR