கிட்டத்தட்ட நான்கு மாத இடைநிறுத்தத்திற்கு பின்னர் இந்தியா மீண்டும் மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவிலும் மலேசியாவிலும் நிலவி வந்த கொரோனா பதட்டங்களுக்குப் பிறகு பாமாயில் இறக்குமதி தடைசெய்யப்பட்டது. அதாவது, மலேசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா ஜனவரி மாதம் தடை விதித்தது. இது மலேசியாவின் பிரதமர் மகாதிர் முகமது இந்தியாவின் கொள்கைகள் மீதான தாக்குதல் நடத்துவதாக கருதப்பட்டது. 


முன்னதாக காஷ்மீர் பிரச்சினை முதல் குடியுரிமைச் சட்டம் வரை இந்திய அரசை கடுமையாக விமர்சித்த மலேசியா அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவின் மீதான பொருளாதார தாக்குதலாகவே பார்க்கப்பட்டது. மலேசியாவில் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான வணிக உறவுகள் மேம்பட்டுள்ளன. 


இந்நிலையில் கடந்த வாரம் மலேசியா, இந்தியாவில் இருந்து 1 லட்சம் டன் அரிசி வாங்குவதற்கு கையெழுத்திட்டது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, ஒரு பெரிய இந்திய ஏற்றுமதியாளர் மலேசியாவுடன் 2 மில்லியன் டன் கச்சா பாமாயிலை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தரவுகளின்படி, 2020-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இந்தியாவின் மொத்த பாமாயில் இறக்குமதி 2019-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 50 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. மலேசியா உலகின் இரண்டாவது பெரிய பாமாயில் ஏற்றுமதியாளராக உள்ளது, சமீபத்திய காலங்களில் எண்ணெய் விலை 10 மாத குறைந்த அளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.