முன்னதாக, கோயம்புத்தூரிலிருந்து புதுதில்லி மற்றும் ஹைதராபாத்திற்கான விமான சேவையை தொடக்கிய ஏர் இந்தியா நிறுவனம், தற்போது, கோயம்புத்தூர் மற்றும் மும்பை இடையிலான விமான சேவையை செப்டெம்பர் 9ம் தேதி முதல் தொடக்க உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சேவையில் மும்பையிலிருந்து காலை 10.55 ற்கு புறப்படும் விமானம், கோயம்புத்தூருக்கு மதியம் 12.40 மணிக்கு வந்து சேரும். கோயம்புத்தூரிலிருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 3.20 மணிக்கு மும்பை சென்றடையும்.


இந்த விமான சேவையை மேற்கொள்ளும் ஏர்பஸ் ஏ 320, 162 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. 


இது கோயம்புத்தூர் மும்பை இடையிலான முதல் நேரடி சேவை ஆகும், அனைத்து பிற விமான போக்குவரத்து நிறுவனங்களும் ஒரு நிறுத்தத்துடன் கூடிய சேவைகளையே வழங்குகிறது. அதன் பயண நேரம் சுமார் 4.5 மணி நேரமாக உள்ளது,


இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனம் சிறிது காலம் நேரடி விமான சேவையை வழங்கியது.  ஆனால் தற்போது அந்த சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. 


மேலும் படிக்க | சீண்டினால் சிதறிப்போவீர்கள்... ராஜ்நாத் சிங் சீனாவிற்கு எச்சரிக்கை..!!!