New Rules April 2024: 2023-24 நிதியாண்டு முடிவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் 1 முதல் தனிநபர் நிதி தொடர்பான பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.  கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பெரும்பாலான புதிய வரி விதிகள் இன்று முதல் அமலுக்கு வர உள்ளன. இதன் மூலம் உங்கள் நிதியை பாதிக்கும் மாற்றங்களும் இருக்கலாம். இந்த புதிய நிதியாண்டு உங்கள் சேமிப்புத் திட்டங்கள், வரிகள், FASTags மற்றும் பிற நிதி விஷயங்களுக்கான விதிகளில் மாற்றங்களை கொண்டு வர உள்ளது.  இந்த மாற்றங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் செயல்படுவது அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |  சீக்கிரம் கோடீஸ்வரர் ஆக ஆசையா? அப்போ ‘இந்த’ தொழிலை செய்து பாருங்கள்..


2024-25 நிதியாண்டில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள்:


தேசிய ஓய்வூதிய முறை


ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், NPSன் தற்போதைய உள்நுழைவு செயல்முறைக்கு பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.  இன்று முதல் கடவுச்சொல் மூலம் CRA அமைப்பை அணுகுவதற்கான டூ பேக்டர் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை உள்ளடக்கியது. இது மொபைல் ஃபோன்களில் பெறப்பட்ட OTP ஐப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படும். அமைப்பின் பாதுகாப்பை அதிகரிக்க PFDRA நடவடிக்கை எடுத்துள்ளது. "CRA அமைப்பை அணுகுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், CRA அமைப்பில் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் மூலம் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுத்தப்படும்" என்று அமைப்பு கூறியுள்ளது.


EPFOல் புதிய விதி


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, சந்தாதாரர் பணியிடங்களை மாற்றும் போது அவர்களின் புதிய நிறுவனத்திற்கு அவர்களின் இருப்பை தானாக மாற்றும். EPFO தானாகவே உங்கள் PF இருப்பை உங்கள் புதிய கம்பெனியின் கணக்கில் வரவு வைக்கும், இது உங்களின் ஓய்வு கால சேமிப்பின் தடையற்ற தொடர்ச்சியை உறுதி செய்யும். EPFO கணக்கு வைத்திருப்பவருக்கு PF தொகையை மாற்றுவதற்கான கோரிக்கை தேவையில்லை.மேலும் பல்வேறு உங்கள் PFஐ நிர்வகிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது.


வருமான வரி 


புதிய வரி விதிப்பு முறை ஏப்ரல் 1 முதல் இயல்புநிலை வரி விதியாக மாறும். நீங்கள் பழைய வரி முறையைத் தேர்வு செய்யவில்லை என்றால், புதிய வரி முறையின் கீழ் தானாகவே வரி செலுத்துவீர்கள். 2024-25 நிதியாண்டில் புதிய முறைக்கான வரி அப்படியே இருக்கும். சமீபத்திய பட்ஜெட்டில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வரை வருமானம் உள்ள ஒருவர் புதிய வரி விதிப்பின் கீழ் வரி செலுத்துவதில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.


ஃபாஸ்டேக் புதிய விதி


ஒருவர் தனது காரின் KYCஐ வங்கியுடன் புதுப்பிக்கவில்லை என்றால், ஏப்ரல் 1 முதல் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். மார்ச் 31 ஆம் தேதிக்குள் உங்கள் FASTag புதுப்பிக்கப்படாவிட்டால் வங்கிகள் அதை செயலிழக்கச் செய்யலாம். FASTagக்கான KYC செயல்முறையைப் புதுப்பிப்பது மிகவும் முக்கியமானது. KYC இல்லாமல், பணம் செலுத்துவது வேலை செய்யாது, மேலும் நீங்கள் இரு மடங்கு டோல் கட்டணங்களைச் செலுத்த நேரிடும். 


எஸ்பிஐ கிரெடிட் கார்டு மாற்றங்கள்


பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிரெடிட் கார்டு விதிகளில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் கொண்டு வந்துள்ளது. நீங்கள் SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாடகை செலுத்தினால், இனி நீங்கள் வெகுமதி புள்ளிகளைப் பெற முடியாது. இருப்பினும், இந்த மாற்றங்கள் சில கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.


மேலும் படிக்க | பெண்கள் அதிக லாபம் பார்க்கும் தொழில்கள்! ‘இதை’ செய்தால் நீங்களும் ஆகலாம் Boss Lady!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ