Banks Revised Interest Rates For Fixed Deposits: எப்போதுமே உங்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு தொகையை சேமிக்க வேண்டும் என்பதை பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் ஒன்றாக உள்ளது. ஏனென்றால் அவசர காலகட்டத்திலும் சரி, வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கிய ஒரு முன்னெடுப்புக்கும் சரி இந்த சேமிப்புதான் உங்களுக்கு அப்போது கைக்கொடுக்கும். எதிர்காலத்தில் உங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினரின் மருத்துவச் செலவுக்கோ, பிள்ளைகளின் கல்விச் செலவுக்கோ, அல்லது பணியில் இருந்து வெளியேறி தனியே தொழில் தொடங்குவதற்கோ நிச்சயம் சேமிப்பு தேவையாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, நீங்கள் மாதச்சம்பளம் வாங்கும் நபராக இருந்தாலும் சரி, தனியாக தொழில் செய்பவராக இருந்தாலும் சரி உங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்புக்கோ, முதலீடுகோ ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒருவேளை உங்களுக்கு ஒரு பெரிய தொகை கையில் வருகிறது, அதை எதில் சேமித்து வைக்க என்றும் சிலருக்கு குழப்பம் வரலாம்.


வட்டி விகிதங்களில் மாற்றம் 


வங்கியில் உங்களின் சேமிப்புக் கணக்கில்தான் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்றில்லை. பல்வேறு முதலீட்டுத் திட்டங்களும் இருக்கின்றன. முதலீடு என்ற உடனே பங்குச்சந்தை அளவுக்கு கூட போக வேண்டாம். ரிஸ்க் இல்லாமல் வங்கிகள், தபால் நிலையங்களிலேயே நிலையான வைப்புத்தொகை (Fixed Deposits) திட்டம் மூலமும் பெரியளவில் உங்களின் சேமிப்பை பெருக்கலாம். அதாவது, ஒரு நிலையான தொகையை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு FD திட்டத்தில் முதலீடு செய்தால், அதன் வட்டி விகிதங்களின் அடிப்படையில் உங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதில் பொது வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் நன்மையும் உண்டு.


மேலும் படிக்க | ரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோ


அந்த வகையில், தற்போது இந்த மூன்று வங்கிகள் தங்களின் நிலையான வைப்புத் தொகை திட்டத்திற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்துள்ளது. ஒருவேளை நீங்கள் FD திட்டத்தில் ஒரு பெரிய தொகையை போட்டுவைக்க திட்டமிட்டிருந்தால் இந்த மூன்று வங்கிகளையும் கருத்தில் கொள்ள மறவாதீர்கள்.


1. பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி


பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி (Punjab and Sindh Bank) தனது வட்டி விகிதத்தில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி அன்றே மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்த வங்கியின் வட்டி விகிதம் பொதுமக்களுக்கு 4 முதல் 7.45 சதவீத்திற்குள் இருக்கிறது. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. அதாவது மூத்த குடிமக்களுக்கு 8 சதவீத வட்டி விகிதம் ஆகும். இந்த வட்டி விகிதங்கள் 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு பொருந்தும்.


2. மகாராஷ்டிரா வங்கி


மகாராஷ்டிரா வங்கியும் (Maharashtra Bank) சமீபத்தில் தங்களது திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் நவ.14ஆம் தேதி அன்று மாற்றம் கொண்டு வந்தது. இதில் 7 முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 2.75% முதல் 7.35% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.85% வரை வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. 200 நாள்கள் FD திட்டத்திற்கு 6.90% வட்டியும், 333 நாள்கள் FD திட்டத்திற்கு 7.35% வட்டியும், 400 நாள்கள் FD திட்டத்திற்கு 7.10% வட்டியும், 777 திட்டத்திற்கு 7.75% வட்டியும் கிடைக்கும்.


3. யெஸ் வங்கி


யெஸ் வங்கியில் (Yes Bank) நீங்கள் மூன்று கோடி ரூபாய் வரை FD திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 8.25% வரை வட்டி கிடைக்கும். இந்த வட்டிக்கு தற்போது அதன் 18 மாத FD திட்டத்திற்கு 25 அடிப்படை புள்ளிகளை குறைத்திருக்கிறது. இது நவ. 5ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால் 18 மாத FD திட்டத்திற்கு 7.75% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மொத்தமாக 3.25% முதல் 7.75% வரை FD திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 8.25% வரை வட்டி வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: மத்திய அரசின் 1 எச்சரிக்கை, 2 குட் நியூஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews



ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ