KCC Card: தமிழக விவசாயிகளுக்கு பொன்னான வாய்ப்பு! விவசாயி கடன் அட்டை பெற வாய்ப்பு
Credit Card For Farmers: விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை (kisan credit card) வழங்குவதற்கான விண்ணப்பம் பெறும் முகாம் தமிழகத்தில் எங்கே நடைபெறுகிறது?
கிசான் கிரெடிட் திட்டம் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். விவசாயி கடன் அட்டைத் திட்டம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு விபத்துக் காப்பீடும் வழங்கப்படுகிறது. மிகவும் குறைந்த வட்டியில், பயிர் உற்பத்தி1998ம் ஆண்டு இந்தத் திட்டத்தை தொடங்கியது.
மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development, NABARD) ஆகியவற்றுடன் இணைந்து விவசாயிகளுக்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்வதற்காகவும், அவர்கள் கடன் வாங்கி கஷ்டப்படாமல் இருப்பதற்காகவும் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் விவசாயி வங்கி கடன் அட்டை என்ற திட்டம் ஆகும்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு அல்லது பிராந்திய வங்கிகளில் இந்த கடன் அட்டைக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். தற்போது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில், கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை (kisan credit card) வழங்குவதற்கான விண்ணப்பம் பெறும் முகாம் நடைபெறவிருக்கிறது.
மேலும் படிக்க | பிஎஃப் கணக்கில் அதிரடி ஏற்றம், வந்தது கூடுதல் தொகை: இப்படி செக் பண்ணுங்க
இந்த முகாமில் 1,60,000 ரூபாய் வரை வட்டி இல்லா பயிர் கடனுக்கான பரிந்துரையும் செய்யப்படும். இந்த நிலையில், இதுவரை விவசாயி கடன் அட்டை இல்லாத விவசாயிகள், கிரெடிட் கார்டு பெறுவதற்கு தங்கள் ஆதார், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிக்கலாம்.
விண்ணப்பம் பெற்ற பிறகு, அவை பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்படும்.
மேலும் படிக்க | சுகர் நோயாளிகள் கவனத்திற்கு..இந்த தவறுகளை ஒரு போதும் செய்ய வேண்டாம்
விவசாயி கடன் அட்டை பெற தகுதிகள் என்ன?
கிரெடிட் ஸ்கோர் சரியாக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் விவசாயியின் நிலம், பயிர் முறை, வருமானம் ஆகியவை பரிசோதிக்கப்படும்
பொதுத்துறை வங்கிகளின் கடன் அட்டை விதிமுறைகள் பொருந்தும்
விவசாயக்கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தில் கடன் கிடைக்குக்ம்
அறுவடை முடிந்த பிறகு கடன் தொகையை செலுத்தினால் போதும்
விவசாய வருமானத்தின் அடிப்படையில் கடன் வசதி உண்டு
விவசாய இடுபொருட்களை வாங்க உதவும்
3 வருடங்களுக்கு கடன் வசதி கிடைக்கும்
விவசாய கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு தனிநபர் விபத்து காப்பீடு கிடைக்கும்
விபத்துக்களால் உண்டாகும் (உள்நாட்டிற்க்குள்) இறப்பு (அல்லது) நிரந்தரமாக உறுப்பு இழப்பு ஏற்பட்டால் விவசாயிக்கு இழப்பீடு கொடுக்கப்படும்
70 வயது வரையிலான அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களுக்கும் காப்பீடு வசதி உண்டு
மேலும் படிக்க | இந்தப் பயிர்களை வளர்த்தால் கோடீஸ்வரராகலாம்! அதிக வருமானம் கொடுக்கும் தோட்டப்பயிர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ