Atal Pension Yojana: இந்திய அரசாங்கம் பொது மக்களின் நலனுக்காக பல வித நலத்திட்டங்களை நடத்துகின்றது. பெண்கள், குழந்தைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள், சம்பள வர்க்கத்தினர், விவசாயிகள், தொழில்முனைவோர் என பல தரப்பு மக்களுக்காக பல வகையான திட்டங்கள் உள்ளன. இவற்றில் மிக பிரபலமாக உள்ள சில திட்டங்களில் ஒன்றுதான் அடல் ஓய்வூதியத் திட்டம். இத்திட்டத்தின் சில முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) அதன் தொடக்கத்திலிருந்தே மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் முதுமையில் மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதாகும். இந்தத் திட்டம் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வருவதாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பொருளாதார ஆய்வறிக்கை


பட்ஜெட்டுக்கு முன்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) நாடாளுமன்றத்தில் இந்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இதில் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் அதிகரித்து வரும் பங்கு பற்றிய விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டன. இதன் பின்னர் பட்ஜெட்டிலும் இதற்கான அறிவிப்பு வரும் என்றும், இதன் அதிகபட்ச தொகை ரூ.5,000 -இலிருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


APY: அதிகரிக்கும் பெண்களின் பங்கு


- 2016-17 நிதியாண்டில், அடல் ஓய்வூதியத் திட்டத்தில் பெண்களின் பங்கு 37.2% ஆக இருந்தது.


- இது 2022-23 நிதியாண்டில் 48.5% ஆக அதிகரித்துள்ளது.


- பெண்களும் இந்த காலத்தில், முதுமை மற்றும் தங்கள் எதிர்காலத்திற்கான நிதித் திட்டமிடலில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதற்கு இது சான்றாக உள்ளது.


- பொருளாதார சுதந்திரமும், விழிப்புணர்ச்சியும் பெண்களின் அதிகரிக்கும் பங்களிப்பிற்கு காரணங்களாக பார்க்கப்படுகின்றன. 


APY: அதிகரிக்கும் இளைஞர்களின் ஆர்வம்


- அடல் ஓய்வூதியத் திட்டம் 18-25 வயதுடைய இளைஞர்களிடையே பிரபலமாகி வருகின்றது.


- 2016-17 நிதியாண்டில் இளைஞர்களின் பங்கு 35 சதவீதமாக இருந்தது. 


- தற்போது இளைஞர்களின் பங்களிப்பு 46.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 


- இளைய தலைமுறையினரிடமும் எதிர்காலத்திற்கான நிதிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. 


மேலும் படிக்க | ITR Filing காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதா? குழப்பும் பதிவுகள், விளக்கமளித்த வருமான வரித்துறை


Atal Pension Scheme: அதிக மக்கள் எதை விரும்புகிறார்கள்?


அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ் மொத்தம் 5 பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவுகளில் பெரும்பாலான சந்தாதாரர்கள், தோராயமாக சுமார் 92% சந்தாதாரர்கள் 1000 ரூபாய் ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 4.7% சந்தாதாரர்கள் ரூ. 5000 திட்டத்தையும் 3% சந்ததாரர்கள் மற்ற திட்டங்களையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு ஒரு காரணமும் உள்ளது. இத்திட்டம் பெரும்பாலும் தங்களுடைய சேமிப்பை விட அன்றாடச் செலவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கீழ்த்தட்டு மக்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.


அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?


அடல் ஓய்வூதியத் திட்டம் 18-40 வயதுடையவர்களுக்கான பாதுகாப்பான எதிர்காலத்திற்கான திட்டமாகும். இது 2015-16 இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் PFRDA ஆல் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது, ​​இந்த திட்டத்தின் கீழ், அரசு உத்தரவாதத்துடன், மாதம், 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. APY திட்டத்தில், உறுப்பினர் இறந்தாலோ, அல்லது அவருக்கு ஏதேனும் கடுமையான நோய் ஏற்பட்டாலோ, டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் 100 சதவீதத்தை 60 வயதில் எடுத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் பங்களிப்பைத் தொடங்க, வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். வருமான வரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடு: 4% டிஏ ஹைக்? AICPI எண்கள் மூலம் வந்த குட் நியூஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ