பல வங்கி கணக்குகள் வைத்திருப்போர் கவனத்திற்கு! இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
உங்கள் குழந்தையின் கல்வி, அவசர நிதி அல்லது வழக்கமான செலவுகள் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் தனித்தனி கணக்குகள் வைத்திருப்பது நல்லது.
வங்கியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கென்று ஒரு சேமிப்பு கணக்கை திறந்து வைத்திருக்கின்றனர். நமது தேவைக்கேற்ப வங்கிகளில் நாம் கணக்கு திறந்துகொள்ளலாம், சேமிப்பை கணக்கை திறப்பதன் மூலம் நமது பணத்தை வீணாக செலவழிக்காமல் பாதுகாப்பாக சேமித்து வைத்து தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். அதிகளவில் வங்கிகள் இருப்பதால் எந்த வங்கியில் கணக்கு திறப்பது என்று பலருக்கும் குழப்பம் இருக்கும், அதற்கு நீங்கள் சில விஷயங்களை ஆராய அவசியம். அதேசமயம் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளைத் திறப்பதன் மூலம் அதிக லாபத்தை பெற முடியும்.
இந்தியாவில் உள்ளவர்கள் பல்வேறு வங்கிகளில் பல சேமிப்புக் கணக்குகளைத் திறந்து அதனை பயன்படுத்தி வரலாம். நீங்கள் இவ்வளவு தான் சேமிப்பு கணக்குகள் வைத்திருக்க வேண்டும் என்று வரம்பு கிடையாது, அதனை கணக்குகளை வேண்டுமானாலும் நீங்கள் வைத்திருக்கலாம், ஆனால் அதேசமயம் நீங்கள் அத்தனை கணக்குகளையும் முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். ஒன்றுக்கு மேற்பட்ட சேமிப்பு கணக்குகளை பராமரிப்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான் என்றாலும், அதை நீங்கள் திறம்பட செய்தால் தான் உங்களுக்கு லாபம் கிடைக்கும். ஒரு நபர் மூன்று கணக்குகளுக்கு மேல் வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | Money Tips! உங்களை லட்சாதிபதியாக ஆக்கும் அரிய ‘20’ ரூபாய்!
உங்கள் குழந்தையின் கல்வி, அவசர நிதி அல்லது வழக்கமான செலவுகள் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் தனித்தனி கணக்குகள் வைத்திருப்பது நல்லது. இப்படி கணக்கு வைத்திருப்பது உங்களுக்கு பராமரிக்கவும் கொஞ்சம் எளிதாக இருக்கும். ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனி கணக்குகளை உருவாக்கிய பிறகு உங்கள் முதன்மைக் கணக்கிலிருந்து பிற கணக்குகளுக்குத் நீங்கள் பணத்தை டிரான்ஸாக்ஷன்கள் செய்து கணக்கை செயலில் வைத்திருக்கலாம். பொதுவாக டெபிட் கார்டில் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்கிற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அவசரகாலத்தில் உங்களால் பெரிய தொகையை எடுக்க முடியாமல் போகலாம், அந்த சமயத்தில் நீங்கள் பல்வேறு சேமிப்புக் கணக்குகளுக்கான டெபிட் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: உறுதியானது டிஏ ஹைக், ஊதிய உயர்வின் முழு கணக்கீடு இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ