உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான 'ஆயுஷ்மான் பாரத்' கொரோனா காலத்தில் நாட்டின் ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீ பிசினஸ் உடனான சிறப்பு நேர்காணலில் பங்கேற்ற தேசிய சுகாதார ஆணையத்தின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி பிரவீன் கெடம் இந்த திட்டம் குறித்து பேசுகையில்., கடந்த ஒரு மாதத்தில் 1000 புதிய மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் 22,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.


விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க 10,000 FPO-களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!...


கொரோனா நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனாவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். இந்த திட்டத்தில், கோவிட் சிகிச்சை மற்றும் சிகிச்சையின் தொகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. PPE கிட் மற்றும் முக கவசம் போன்றவற்றின் செலவுகளும் இதில் அடங்கும். மாநில அரசுகள் அவற்றின் தேவைக்கேற்ப வெவ்வேறு தொகுப்புகளை தயாரிக்குமாறு மையம் கேட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கோவிட் (COVID-19) தொகுப்பின் கீழ், நாடு முழுவதும் சுமார் 8000 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, சுமார் 6000 கொரோனா நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


விமானம் மூலம் தமிழகம் வருவோருக்கு RT-PCR சோதனை கட்டாயம்: TN Govt...


ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரும் மக்களுக்கு எளிதாக்கும் வகையில், நாடு முழுவதும் 22,000 மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆயுஷ்மான் பாரத் யோஜனா அல்லது பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனா என்பது இந்திய அரசின் சுகாதாரத் திட்டமாகும், இதன் நோக்கம் பொருளாதார ரீதியாக பலவீனமானவர்களுக்கு குறிப்பாக PPL அட்டை வைத்திருப்பவர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்குவதாகும். இந்த திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை பணமில்லா சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது.