புதுடெல்லி: தொழில்நுட்பம் அதிகமாவதால், வசதிகள் அதிகமாவதோடு பல பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன. இன்றைய காலத்தில் இணைய வழி வங்கி செயல்முறைகள் அதிகரித்து வருகின்றன. உழைத்து சம்பாதித்த பணத்தை நிமிடங்களில் அடித்துச்செல்ல பல ஏமாற்றுக்காரர்கள் காத்திருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலவசம், சலுகை என ஆசைக்காட்டி மக்களது பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் செல்கிறார்கள் இந்த கால திருடர்கள். ஆகையால், எந்த ஒரு செயலை செய்யும்போதும் மிகவும் கவனமாக இருப்பது மிக முக்கியமாகும். அப்படி செய்தால், தீங்கெண்ணம் கொண்டு செயல்படுவோரின் எண்ணம் நிறைவேறாது.


வாட்ஸ்அப் அழைப்பு வழியாக மோசடி


வாட்ஸ்அப்பில் தெரியாத எண்ணிலிருந்து வாய்ஸ் கால் வந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இப்படிப்பட்ட அழைப்புகளை மேற்கொள்பவர்கள் உங்களை ஏமாற்றக்கூடும். மோசடி (Frauds) செய்த பிறகு இந்த நபர்கள் நம் எண்களை பிளாக் செய்து விடுகிறார்கள். ஆகையால் அவர்களை அணுகவும் முடியாமல் போய்விடுகிறது. 


ALSO READ: SBI Alert: இந்த தவறை செய்தால் மொத்த பணமும் காலி, QR Code scan பற்றி எச்சரித்தது SBI


UPI மூலம் மோசடி


ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகமான UPI மூலம் யாருக்கும் எளிதாக பணம் அனுப்பவோ அல்லது பணத்தைப் பெறவோ முடியும். மோசடி செய்பவர்கள் UPI மூலம் டெபிட் இணைப்பை அனுப்புகிறார்கள். ஒரு நபர் அந்த இணைப்பைக் கிளிக் செய்து அவரது பின்னை உள்ளிட்டவுடன், பணம் அவரது கணக்கிலிருந்து கழிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க, தெரியாத டெபிட் கோரிக்கைகளை உடனடியாக நீக்கிவிட வேண்டும். தெரியாத எண்களிலிருந்து வரும் இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. 


QR குறியீடு மூலம் மோசடி


மோசடி செய்பவர்கள் QR அதாவது விரைவான மறுமொழி குறியீடு மூலமும் வாடிக்கையாளர்களின் பணத்தை பறிக்க முயற்சிக்கின்றனர். இதில், QR குறியீடு மொபைலுக்கு அனுப்பப்பட்டு, அதைப் பெறுபவர் QR குறியீடு இணைப்பைக் கிளிக் செய்கிறார். பின்னர் மோசடி நபர்கள், அவரது மொபைல் தொலைபேசியின் QR குறியீட்டை ஸ்கேன் செய்து வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து விடுகிறார்கள். 


பேரழிவை ஏற்படுத்தும் இணைப்புகள் 


கொரோனா வைரஸ் (Coronavirus) தொடர்பான எந்த இணைப்பையும் கவனமாகக் கிளிக் செய்யவும். தற்போதுள்ள இக்கட்டான சூழலில் மோசடி நபர்கள் எந்த தீங்கெண்ணத்துடனும் இந்த இணைப்புகளை அனுப்பக்கூடும். 


இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்


- சமூக ஊடகங்களில் தேவையற்ற மின்னஞ்சல், எஸ்எம்எஸ் அல்லது செய்திகளை கிளிக் செய்து திறப்பதைத் தடுக்கவும். 
- அனுப்புநரின் முகவரி இருந்தாலும், இணைப்பைத் திறப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 
- அறியப்படாதோரிடமிருந்து வரும் மின்னஞ்சல் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அறியப்படாத வலைத்தளங்களை திறக்க வேண்டாம்.


ALSO READ: Google Search: கூகிளில் இவற்றை ஒருபோதும் தேடகூடாது; அதனால் பெரும் இழப்பு ஏற்படலாம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR