வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள் அல்லது வருமான வரி தாக்கலில் ஏஎதேனும் தவறு செய்தவர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவும், தாக்கல் செய்த வருமான வரி தகவலில் உள்ள தகவலில் உள்ள தவறுகளை சரி செய்யவும் இன்னும் வாய்ப்பு உள்ளது. 5,000 தாமதக் கட்டணத்தைச் செலுத்தி, 2024-25ம் ஆண்டிற்கான (AY 2024-25) உங்கள் வருமான வரி தக்கலை டிசம்பர் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். இந்த காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் சிக்கலில் சிக்கலாம் என்பதோடு அபராதத் தொகையும் அதிகரிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரிவு 139(1) இன் கீழ், நிர்ணயிக்கப்பட்ட தேதி அல்லது அதற்கு முன் தாக்கல் செய்யப்படாத வருமானம் தாமதமான வருமான வரி தாக்கல் (Belated return) எனப்படும். பிரிவு 139(4)ன் கீழ் தாமதமான வருமான வரி தாக்கல் செய்யப்படுகிறது.


தாமதமான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம்


2023-24 (AY 2024-25) நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான தேதி ஜூலை 31, 2024 என நிர்ணயிக்கபட்டிருந்த நிலையில், இந்த காலக்கெடுவிற்குள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய தவறிய வரி செலுத்துவோர் தாமதமான வருமான வரி தாக்கலை செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் உள்ளது. இருப்பினும், தாமதமான வருமானத்தை தாக்கல் செய்வதற்கு, பிரிவு 234F இன் கீழ் அபராதக் கட்டணம் செலுத்த வேண்டும்.


தாமதமாக தாக்கல் செய்வதற்கான அபராத கட்டணம்


பிரிவு 234F இன் படி, பிரிவு 139(1) இன் கீழ் காலக்கெடுவுக்குப் பிறகு ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டால், தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணம் ரூ. 5,000 செலுத்த வேண்டும். இருப்பினும், நபரின் மொத்த வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், அவர் தாமதமாக தாக்கல் செய்வதற்காக கட்டணமாக ரூ.1,000 மட்டுமே செலுத்த வேண்டும்.


தாமதமான ITR  என்னும் வருமான வரி தாக்கலை  செய்வதற்கான வழிமுறை


2023-24 நிதியாண்டிற்கான தாமத வருமான வரியை தாக்க செய்ய , கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.


1. முதலில் வருமான வரித் துறையின் e-filing போர்ட்டலுக்குச் செல்லவும். 


2. பின்னர் உள்நுழைய அல்லது பதிவு செய்ய உங்கள் பான் எண்ணை பயனர் ஐடியாகப் பயன்படுத்தவும்.


3. உங்கள் வருமானத்திற்கு ஏற்ப சரியான ITR படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


4. இதற்குப் பிறகு 2023-24 நிதியாண்டிற்கான 2024-25 என்ற மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுக்கவும் .


5. இப்போது உங்கள் வருமானம், வருமான வரி விலக்கு மற்றும் வரிப் பொறுப்பு பற்றிய அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பவும்.


6. இதற்குப் பிறகு, வட்டி மற்றும் அபராதம் உட்பட ஏதேனும் நிலுவையில் உள்ள வரியைச் செலுத்தவும்.


7. ஆதார் OTP,  நெட் பேங்கிங் அல்லது நேரடி சரிபார்ப்பு மூலம் வெரிஃபை செய்த பிறகு வருமானத்தை சமர்ப்பிக்கவும்.


டிசம்பர் 31 காலக்கெடுவை நாம் தவறவிட்டால் என்ன நடக்கும்?


2024- 25 ஆம் ஆண்டிற்கான ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான டிசம்பர் 31 காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், உங்கள் அபராதத் தொகை ரூ.10,000 ஆக அதிகரிக்கும். உங்கள் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால். நீங்கள் சட்ட நடவடிக்கை மற்றும் நிதி இழப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும்.