Gold Monetization Scheme: தங்கம் நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு விஷயமாக மாறி விட்டது. நகையாக போட்டு அழகு பார்ப்பதற்கு மட்டுமல்லாமல், ஒரு சேமிப்பு முறையாகவும் தங்கம் மிக பிரபலமாக உள்ளது. நம் நாட்டைப் பொறுத்த வரை, தங்கத்திற்கான ஆசையும் மவுசும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் வீட்டில் அதிக தங்கத்தை வைத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். விரைவில் தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதற்கான விதிகளில் அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் (Gold Monetization Scheme) அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்த திட்டத்தில் அனைத்து அரசு வங்கிகளும் (National Banks) சேர்க்கப்படுகின்றன.


ஜிஎம்எஸ் திட்டம் வங்கியின் குறைந்தது 50% கிளைகளில் கிடைக்கும்


தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வங்கியின் குறைந்தபட்சம் 50% கிளைகளில் ஜிஎம்எஸ் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்படுவதை அரசாங்கம் கட்டாயமாக்கக்கூடும். இந்த திட்டத்தின் கீழ் நகைக்கடைக்காரர்களுக்கும் தங்க வைப்பு பெறும் உரிமை கிடைக்கக்கூடும். மேலும், இந்த திட்டத்தின் கீழ், வங்கிகள் நகை விற்பனையாளர்கள் மூலம் தங்க டெபாசிட்டைப் பெற முடியும். புதிய மாற்றங்களின் கீழ், இந்தத் திட்டத்துடன் அதிக வாடிக்கையாளர்களை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.


தங்கத்தை 10 கிராம் வரை டெபாசிட் செய்ய முடியும்


இந்த திட்டத்தின் கீழ், வங்கிகளில் 10 கிராம் வரை தங்கத்தை (Gold) டெபாசிட் செய்ய வசதி பெறலாம். தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தங்கத்தின் மீது கடன் வாங்குவதும் எளிதாக இருக்கும். இந்த திட்டத்தின் கீழ், வரும் நாட்களில், தங்க உலோக கடனில் இந்திய தர சான்றிதழ் விநியோகத்திற்கான அங்கீகாரமும் கிடைக்கக்கூடும்.


ALSO READ: EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வெளியானது Good News!


 


தங்கத்தை பணமாக்கும் திட்டம் 2015 இல் வந்தது


வீட்டிலுள்ள தங்கத்தை நாட்டின் பொருளாதாரத்துடன் இணைக்க தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை 2015 ஆம் ஆண்டில் அரசாங்கம் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், வீட்டின் லாக்கர்களில் பூட்டப்பட்டிருக்கும் தங்கத்தை டெபாசிட் செய்து அதில் வட்டி பெறலாம். சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தின் கீழ், தங்கத்தை வைத்திருக்க வங்கியில் லாக்கரை எடுக்க வேண்டிய அவசியமில்லை. வங்கியே உங்கள் தங்கத்தை பாதுகாப்பாக வைத்து அதற்கு வட்டியும் செலுத்தும்.


இதற்காக கொண்டுவரப்பட்டது இந்த திட்டம்


இந்த திட்டத்தின் பின்னால் அரசாங்கத்தின் நோக்கம், மக்கள் வீட்டில் வைத்திருந்த தங்கத்தை வெளியே கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தில் சேர்ப்பதாகும். இதனால் விலைமதிப்பற்ற உலோகத்தின் பயன்பாடும் அதிகரிக்கும். இந்த திட்டத்தில் அரசாங்கம் இப்போது சில மாற்றங்களைச் செய்யப் போகிறது.


2.25% வரை வட்டி கிடைக்கும்


தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ், தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்கு 2.25 சதவீதம் வரை வங்கி உங்களுக்கு வட்டி செலுத்தும். நடுத்தர காலம் மற்றும் நீண்ட காலத்தைத் தவிர, இந்த திட்டத்தில் நீங்கள் 1.3 ஆண்டுகள், 2.4 ஆண்டுகள் மற்றும் 5 நாட்களுக்கு கூட தங்கத்தை டெபாசிட் செய்யலாம். வீடுகளின் லாக்கர்களிலும் பெட்டிகளிலும் பூட்டப்பட்டு இருந்த சுமார் 25 ஆயிரம் டன் தங்கத்தை, நாட்டின் பொருளாதார முறையில் இணைப்பதற்காக 1999 ஆம் ஆண்டில் அரசாங்கம் தங்க வைப்புத் திட்டத்தை (தங்கம் டெபாசிட்) தொடங்கியது. தங்க பணமாக்குதல் என்பது அதே வைப்புத் திட்டத்தின் மேம்பட்ட வடிவமாகும்.


ALSO READ: வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு good news: வீட்டு வாடகையில் Rs.1000 வரை Cashback கிடைக்கும்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR