ரேஷன் கார்டு சமீபத்திய செய்திகள்: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. அதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நீங்களும் ரேஷனை வாங்கிக் கொண்டு இருந்தால், இந்த புதிய விதிகளை கண்டிப்பாக அறிந்து கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன
அரசின் இலவச ரேஷன் வசதியை, தகுதியற்ற பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. மேலும், புதிய வழிமுறைகளை பின்பற்றாத பயனாளிகளின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ


வெரிஃபிகேஷன் கட்டாயம் செய்ய வேண்டும்
மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இலவச ரேஷன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் அனைவரும், அவர்களின் வெரிஃபிகேஷனை மேற்கொள்ள வேண்டும். இதற்காக 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வெரிஃபிகேஷனில் நீங்கள் தகுதியற்றவர் என கண்டறியப்பட்டால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.


கோடிக்கணக்கான கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்களின் கார்டுகளை அரசு வேகமாக ரத்து செய்து வருகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை சுமார் 2 கோடியே 41 லட்சம் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த கார்டுகளில் பெரும்பாலானவை உ.பி.யில் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


பொங்கல் பரிசு: ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 ரொக்கம்
இதற்கிடையில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது பற்றி தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், ரொக்கமாக ரூ.1,000 மட்டும் வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.


மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியின் தாக்கம் பாடாய் படுத்துகிறதா? இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ