ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி, அரசு வெளியிட்ட புதிய வழிமுறைகள்
Ration Card New Rules 2022: புதிய பட்டியலின் கீழ் ஏபிஎல் கார்டு, பிபிஎல் கார்டு மற்றும் அந்த்யோதயா கார்டுகளும் வழங்கப்படும். சில நாட்களுக்கு முன், ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த பெரும்பாலானோரின் பெயர்கள், புதிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
ரேஷன் கார்டு 2022: கடந்த சில மாதங்களாக ரேஷன் கார்டுதாரர்களை சரிபார்க்கும் பணி அரசால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில், இந்த பணியை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு யோகி அரசு உத்தரவிட்டது. இந்த சரிபார்ப்பின் போது தகுதியில்லாத பயனாளிகளின் ரேஷன் கார்டை ரத்து செய்யவும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கவும் விதிமுறைகள் போடப்பட்டு உள்ளது.
புதிய பட்டியலில் பெரும்பாலானோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன
ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு மலிவு விலையில் தானியங்கள் வழங்கி வருகின்றது. இது தவிர, நீங்கள் அதை அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் பயன்படுத்தலாம். இதற்கிடையில் புதிய பட்டியலின் கீழ் ஏபிஎல் கார்டு, பிபிஎல் கார்டு மற்றும் அந்த்யோதயா அட்டையும் வழங்கப்படும். சில நாட்களுக்கு முன், ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த பெரும்பாலானோரின் பெயர்கள், புதிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதன்படி நீங்களும் விண்ணப்பித்திருந்தால், இந்த பட்டியலில் உங்கள் பெயரை உடனடியாக சரிபார்க்கவும்.
மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ
உங்கள் பெயரை பட்டியலில் இப்படி சரிபார்க்கவும்
இந்த நிலையில் நீங்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தால் அதற்கான பட்டியல் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே உங்கள் பெயரை ஆன்லைனில் இந்த முறையில் சரிபார்க்கலாம்-
* முதலில் உத்தரப் பிரதேசத்தின் உணவுப் பாதுகாப்புத் துறையின் இணையதளத்திற்குச் செல்லவும் ( http://fsdaup.gov.in/ ).
* இங்கே ரேஷன் கார்டு பட்டியலுக்குச் சென்று உங்கள் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* இப்போது நீங்கள் கிராமப்புறத்தில் வசிக்கிறீர்களா அல்லது நகர்ப்புறத்தில் வசிக்கிறீர்களா என்பதைப் பொறுத்து அருகிலுள்ள டீலரின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* இந்த செயல்முறை முடிந்ததும், புதிய ரேஷன் கார்டு 2022 இன் பட்டியலை இங்கே காண்பீர்கள். இதில் உங்கள் பெயரைச் சரிபார்க்கலாம்.
யோகி அரசு பிறப்பித்த உத்தரவின்படி, அந்த்யோதயா மற்றும் தகுதியான வீட்டு ரேஷன் கார்டுதாரர்களின் சரிபார்ப்பு செய்யப்படுகிறது. சரிபார்ப்பின் போது தகுதியில்லாத பயனாளிகளின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுகிறது. சரிபார்ப்பின் போது ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்ட பயனாளிகளுக்குப் பதிலாக புதிய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியின் தாக்கம் பாடாய் படுத்துகிறதா? இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ