ஈபிஎஃப்ஒவின் மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) மார்ச் 5 ஆம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஈ.பி.எஃப் மீதான வட்டி விகிதத்தை குறித்த முடிவுகளை மேற்கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருங்கால கணக்கு வைத்திருப்பவர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி. நடப்பு நிதியாண்டுக்கான பிஎப் வட்டியை 8.5 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


பிஎப் நிறுவனம், தொழிலாளர்களின் பிஎப் பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை நிர்ணயித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 8.65 சதவீதம் வட்டி நிர்ணயித்தது. பிஎப் அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு தொழிலாளர்களின் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும். நடப்பு நிதியாண்டுக்கான வட்டி விகித நிர்ணயம் தொடர்பாக, மார்ச் 5ம் தேதி பிஎப் நிறுவனத்தின் மத்திய வாரிய அறக்கட்டளை கூட்டம் நடைபெற உள்ளது.


ஈபிஎஃப் வட்டி விகிதத்தை சிறிய சேமிப்பு திட்டங்களுக்கு சமப்படுத்த தொழிலாளர் அமைச்சகத்தை சமாதானப்படுத்தவும் நிதி அமைச்சகம் முயற்சிக்கிறது. சிறிய சேமிப்பு திட்டங்கள், பொது எதிர்கால நிதி மற்றும் பிற தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் ஆகியவை அடங்கும்.


ஆண்டின் EPF வட்டி விகிதம் என்ன?


2013-14 மற்றும் 2014-15 நிதியாண்டில் 8.75 சதவீதமாக இருந்தது.
2015-16 நிதியாண்டில் 8.8 சதவீதமாக இருந்தது.
2016-17 நிதியாண்டில் 8.65% வட்டி விகிதம்.
2017-18 நிதியாண்டில் இது 8.55% ஆக இருந்தது.
2018-19 நிதியாண்டில் இது 8.65 சதவீதமாக இருந்தது.