உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான அற்புதமான முதலீட்டு திட்டங்கள்: கிடைக்கும் பம்பர் லாபம்
Saving Schemes: பொது வருங்கால வைப்பு நிதி PPF என்றும் அழைக்கப்படுகிறது. நீண்ட லாக்-இன் காலத்தின் அடிப்படையில், இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
குடும்பம் என்பது நம் வாழ்வின் அஸ்திவாரம். குடும்ப உறுப்பினர்கள் வாழ்வில் நிம்மதியாக இருக்க நாம் நம்மால் ஆன அனைத்தையும் செய்கிறோம். குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலத்துக்காக பெற்றோர் யோசித்து, பல வழிகளை சிந்தித்து பல வித நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். அதில் ஒன்றுதான் சேமிப்பு. ஒரு குழந்தை பிறந்தவுடன், பெற்றோர், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பல்வேறு முதலீட்டு விருப்பங்களைத் தேடுகிறார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், நல்ல வருமானம் தரக்கூடிய திட்டங்களுக்கான தேடல் எப்போதுமே சமூகத்தில் உள்ளது. உங்களுக்கும் அப்படி ஒரு திட்டத்திற்கான தேடல் உள்ளது என்றால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த பதிவில் நாம் குறிப்பிட்டுள்ள திட்டங்கள் மூலம், ஒவ்வொரு மாதமும் சிறிது சிறிதாக முதலீடு செய்து, குழந்தை வளரும் போது கணிசமான அளவு நிதியை சேர்க்கலாம். குழந்தைகளின் உயர்கல்வியைத் தவிர, எதிர்காலத்தில் அவர்களின் திருமணம் மற்றும் பிற தேவைகளுக்காக இந்தத் தொகையைச் செலவிடலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி
பொது வருங்கால வைப்பு நிதி PPF என்றும் அழைக்கப்படுகிறது. நீண்ட லாக்-இன் காலத்தின் அடிப்படையில், இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். உங்கள் குழந்தை 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், நீங்கள் அவருக்காக PPF கணக்கைத் திறக்கலாம். இந்தக் கணக்கு 15 வருடங்களில் முதிர்ச்சியடைகிறது. எனவே குழந்தைக்கு எவ்வளவு விரைவில் இந்த கணக்கை திறக்கிறீர்களோ, அது அவர்களுக்கு அவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்.
உதாரணமாக, உங்கள் குழந்தைக்கு 4 அல்லது 5 வயது என்று வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் அவருக்கு PPF கணக்கைத் திறக்கிறீர்கள். அவருக்கு 19 அல்லது 20 வயதாகும்போது, அவருடைய தேவைக்கான தொகையைப் பெறுவார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் குழந்தையும் இந்தக் கணக்கைத் தானே இயக்க முடியும். மேலும் அவர் விரும்பினால் அதிலிருந்து பணத்தை எடுக்கலாம். தற்போது இதற்கு 7.1 சதவீதம் வட்டி கிடைக்கிறது.
செல்வமகள் சேமிப்புத் திட்டம்
உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால், அவருடைய எதிர்காலத்திற்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் இத்திட்டத்தின் கீழ் ஏதேனும் தபால் அலுவலகம் அல்லது அரசு வங்கியில் கணக்கு தொடங்கலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் நல்ல விஷயம் என்னவென்றால், அது உங்கள் நிதி நிலையில் அதிக சுமையை ஏற்படுத்துவதில்லை.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் 21 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. ஆனால் குழந்தைக்கு 18 வயதாகும்போது, அவருடைய கல்விக்காக கணக்கிலிருந்து சில தொகையை நீங்கள் எடுக்கலாம். ஆனால் 21 வருடங்கள் முடிந்த பிறகுதான் முழுத் தொகையும் கிடைக்கும். தற்போது, இத்திட்டத்தில் 8 சதவீத கூட்டு வட்டி (காம்பவுண்டிங் இன்டிரஸ்ட்) கிடைக்கிறது.
மேலும் படிக்க | எல்ஐசி-யில் ஆண்களுக்கு மட்டுமே உள்ள சூப்பரான திட்டம்! உடனே அப்ளை பண்ணுங்க!
எஸ்ஐபி
குழந்தைகளுக்கான நிதி திட்டமிடல் செய்யும் போது, மியூசுவல் ஃபண்டுகளில் நிதிகளில் முதலீடு செய்யும் விருப்பத்தையும் நீங்கள் தேர்வு செய்யலாம். SIP இதற்கு சிறந்த வழியாக இருக்கும். முறையான முதலீட்டுத் திட்டம் SIP எனப்படும். மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான பாதுகாப்பான விருப்பமாக இது கருதப்படுகிறது. வெறும் 100 ரூபாயில் எஸ்ஐபி -ஐத் தொடங்கலாம். அதன் நீண்ட கால முதலீடு (லாங் டர்ம்) சிறந்த வருமானத்தை அளிக்கிறது. குழந்தைகளின் கல்வி மட்டுமின்றி, இதிலிருந்து கிடைக்கும் தொகையை அவர்களின் பிற தேவையான செலவுகளுக்கும் பயன்படுத்தலாம்.
மக்கள் எஸ்ஐபி -இல் கூட்டும் பலனைப் (காம்பவுண்டிங்) பெறுவீர்கள். இருப்பினும், சந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அதன் உத்தரவாதமான வருமானத்தை கூற முடியாது. இந்தத் திட்டம் சராசரியாக 12 சதவீதம் வருமானம் தருவதாக பெரும்பாலான நிபுணர்கள் நம்புகின்றனர்.
நிலையான வைப்பு (ஃபிக்ஸ்ட் டெபாடிட்)
ஃபிக்ஸட் டெபாசிட் என்பது பெரும்பாலான மக்களால் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. சேமிப்புக் கணக்குகளுடன் ஒப்பிடுகையில் இது உங்களுக்கு சிறந்த வட்டியை வழங்குகிறது. நீங்கள் எந்த வங்கி அல்லது தபால் அலுவலகத்திலிருந்தும் FD -ஐத் தொடங்கலாம். நீங்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை FD இதை செய்யலாம். நல்ல விஷயம் என்னவென்றால், தேவைப்பட்டால் அதை எளிதாக திரும்பப் பெறலாம். ஆனால் எவ்வளவு சீக்கிரம் நீங்கள் ஒரு நிலையான வைப்புத்தொகையை தொடங்குகிறீர்களோ, அவ்வளவு குழந்தைக்கு சிறப்பாக இருக்கும். மேலும் இதனால் இந்தத் தொகையை நீங்கள் சரியான நேரத்தில் பயன்படுத்த முடியும்.
மேலும் படிக்க | இன்னும் 3 நாட்கள் தான்! ஜூலை 1 முதல் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ