பழைய ஓய்வூதியத் திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஒவ்வொரு நாளும் பல வித செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துவது குறித்து, நாட்டில் பல வித விவாதங்கள் நடந்துவருகின்றன. இதற்கிடையில் பழைய ஓய்வூதிய முறை குறித்தும், தேசிய ஓய்வூதிய முறையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்தும் பல வித கருத்துகளும் புதுப்பிகளும் வந்தவண்னம் உள்ளன. நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் தற்போது பழைய ஓய்வூதியம் குறித்து மத்திய அரசிடம் இருந்து பெரிய செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்ட அனைத்து மாநிலங்களிலும், மாநில அரசுகள் என்பிஎஸ் பணத்தை திரும்பக் கோருகின்றன, ஆனால் மோடி அரசு இந்தப் பணத்தைத் தர மறுத்துவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது
தற்போது ராஜஸ்தானின் அசோக் கெலாட் அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை பெரிய பிரச்சினையாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி இது இம்முறை முக்கிய தேர்தல் பிரச்சினையாக மாறியுள்ளது. அதன்படி ராஜஸ்தான் அரசு ஏப்ரல் 2023 இல் பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தது. மறுபுறம், மத்திய அரசு என்பிஎஸ் பரிசீலனைக்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.


மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இனி ரயிலில் இந்த சேவைகள் இருக்காது!


10% மாநில அரசால் டெபாசிட் செய்யப்படுகிறது
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் மாநில அரசால் டெபாசிட் செய்யப்படுகிறது. ராஜஸ்தானில் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் 5,24,72 பழைய ஓய்வூதியத் திட்டக் கணக்குகள் உள்ளன. இதில், அரசு சார்பில் ரூ.14,171 கோடியும், பணியாளர்கள் மூலம் ரூ.14,167 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதனுடன் வட்டித் தொகையையும் சேர்த்தால் இந்தப் பணம் ரூ.40,157 கோடி ஆகும். மே 19, 2022 அன்று மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில், புதிய ஓய்வூதிய முறையின் பங்களிப்பை வட்டியுடன் சேர்த்து மாநில அரசிடம் ஊழியர்கள் திரும்பச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றத்திற்கான தயாரிப்பு
மாநில அரசுக்கு நிதி வழங்க மத்திய அரசு தெளிவாக மறுத்துவிட்டதால், அந்த அறிவிப்பில் மாற்றம் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், அரசு ஊழியர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில், புதிய ஓய்வூதியத் திட்டத்திலேயே மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள்
புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கும், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே திரும்பப் பெற வேண்டும் என ஊழியர்களும், ஓய்வூதியர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தில், ஓய்வுபெறும் போது, ​​ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக பாதி சம்பளம் கிடைக்கும். அதே நேரத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தில், ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் + டிஏ பிடித்தம் செய்யப்படுகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஊழியர்களின் சம்பளத்தில் எந்தப் பணமும் பிடித்தம் செய்யப்படுவதில்லை.


பல ஊழியர்கள் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர்
ஜனவரி 2004க்குப் பிறகு நியமிக்கப்பட்ட 5.24 லட்சம் ஊழியர்களில் 3554 பேர் ஓராண்டுக்கு முன்பே ஓய்வு பெற்றவர்கள் என்று மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. அத்தகைய ஊழியர்கள் ஓய்வூதிய பலனைப் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய செய்தி: வெளியானது படிவம்: இதுதான் கடைசி தேதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ