7ஆவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். எனினும், இந்த காத்திருப்பு விரைவில் முடிவடையவுள்ளது. அக்டோபரில் பண்டிகை காலம் தொடங்கும் நிலையில், இந்த வேளையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். இதன் காரணமான வரவிருக்கும் பண்டிகை காலம் ஊழியர்களுக்கு உற்சாகத்தை அளிக்கவுள்ளது. அரசு விரைவில் அகவிலைப்படியை (டிஏ) உயர்த்தி அறிவிக்க உள்ளது. அதை பற்றி விரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரும்


பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படியை அதிகரிக்கின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த அதிகரிப்பு அமலுக்கு வருகின்றது. ஆனால், ஜனவரியின் டிஏ உயர்வு பெரும்பாலும் மார்ச் மாதத்திலும், ஜூலை மாதத்தின் டிஏ உயர்வு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலும் அறிவிக்கப்படுகின்றன. 


டிஏ எவ்வளவு அதிகரிக்கும்? 


தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் DA கணக்கிடப்படுகிறது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை கணக்கிடுவதற்கான சூத்திரத்தை அறிந்து கொள்ளுங்கள்.


7th CPC DA% = [{Average of AICPI-IW (Base Year 2001=100) for the last 12 months – 261.42}/261.42x100]
=[{382.32-261.42}/261.42x100]= 46.24


கடந்த 12 மாதங்களில் சராசரி CPI-IW 382.32 ஆகும். இதை டிஏ சூத்திரப்படி பார்த்தால், டிஏ 46.24% ஆக இருக்கும். தற்போது ஊழியர்களுக்கு 42 சதவிகித அகவிலைப்படி (DA Hike) அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் முழுமையான கணக்கீட்டைப் பார்த்தால், ஜூலை 1, 2023 முதல் அகவிலைப்படியில் 46.24%-42% = 4.24% அதிகரிப்பு இருக்கலாம். அரசாங்கம் தசம எண்களை கணக்கில் கொள்வதில்லை. ஆகையால் இந்த முறை அகவிலைபப்டி 4 சதவீதம் அதிகரிக்கலாம் என கூறப்ப்படுகின்றது. அக்டோபரில் அகவிலைப்படியில் 4% அதிகரிப்பு அறிவிக்கப்படலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! இந்த தேதியில் டிஏ உயர்வு?


டிஏ ஹைக் எப்போது அமலுக்கு வரும்? 


தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவிகித அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இதில் அதிகரிப்பு அறிவிக்கப்பட்டவுடன், இது 46 சதவிகிதமாக உயரும் என நம்பப்படுகின்றது. அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஜூலை 1 முதலான அகவிலைப்படி அதிகரிப்பின் அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். 


சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? 


ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் ஒரு பகுதியாக டிஏ கணக்கிடப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு குறித்த செய்தி ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும். டிஏ உயர்த்தப்பட்டவுடன், ஊழியர்களின் சம்பளமும் உயரும். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.36,500 எனில், 42% அகவிலைப்படியின்படி ரூ.15,330 வழங்கப்படுகிறது. ஆனால் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தால், டிஏ 46% ஆகிவிடும். மேலும் இதன் கீழ் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.16,790 வழங்கப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மத்திய ஊழியருக்கு மாதம் ரூ.1,460 கூடுதலாக கிடைக்கப் போகிறது.


இதனுடன் அரியர் தொகையும் கிடைக்கும்


அகவிலைப்படி உயர்வு ஜூலை 2023 முதல் அமல்படுத்தப்படும். டிஏ உயர்வு அறிவிக்கப்பட்டவுடன் ஜூலை 2023 முதலான அகவிலைப்படி அதிகரிப்பு அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். அக்டோபரில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், அதனுடன் ஊழியர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத அரியர் தொகையும் வழங்கப்படும். ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் பணவீக்கத்திற்கு ஏற்ப அதிகரிக்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கும் ஓய்வூதியத்துடன் கூடுதலாக 4 சதவீதம் செலுத்தப்படும். இதனுடன், ஜூலை முதல் ஓய்வூதிய அரியர் தொகையும் வழங்கப்படும்.


மேலும் படிக்க | இந்த தேதியில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும், டபுளாக சம்பளம் உயரும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ