PF ஜாக்பாட் செய்தி: விதிகளில் மாற்றம், இனி அதிக ஓய்வூதியம் கிடைக்கும்... அமைச்சர் அளித்த அப்டேட்

EPFO Pension: இபிஎப்ஓ ஓய்வூதியத் திட்ட விதிகளில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தெரிவித்தார்.
EPFO Pension: PF உறுப்பினரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. EPFO ஓய்வூதியத் திட்டத்தின் விதிகளில் பெரிய மாற்றங்களுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இபிஎப்ஓ ஓய்வூதியத் திட்ட விதிகளில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தெரிவித்தார். இதன்படி, இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) PF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் மொத்தத் தொகையையும் ஓய்வூதியமாக மாற்றிக்கொள்ளும் வசதியை வழங்குவதற்கான வாய்ப்பை பற்றி ஆராயப்பட்டு வருகின்றது.
EPFO Pension Scheme
சமூக பாதுகாப்புக்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஊழியர்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அமைச்சர் மாண்டவியா கூறினார். பணி ஓய்வுக்குப் பிறகு அதிக ஓய்வூதியத்தைப் பெற, ஒரு ஊழியர் தனது இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்யப்பட்ட தொகை முழுவதையும் ஓய்வூதிய நிதியாக மாற்ற வேண்டும் என்று விரும்பினால் இப்படிப்பட்ட வசதி அவருக்கு உதவும் என அமைச்சர் கூறினார்.
இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) இந்த வசதியை அளிக்க இதை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கூடிய விரைவில், இந்த வசதி குறித்த அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டு. விதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது.
EPS: ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம்
EPFO இன் கீழ், ஊழியர் மற்றும் நிறுவனம் என இரு தரப்பினரும் மாதா மாதம் PF கணக்கில் 12% தொகையை பங்களிக்கிறார்கள். ஊழியர்களும் முழு பங்களிப்பும் EPF -க்கு செல்கிறது. நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திலும் (EPS), மீதமுள்ள 3.67% ஒவ்வொரு EPF கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகிறது.
EPFO -இன் கீழ் செயல்படும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) மூலம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் (Pension) அளிக்கப்படுகின்றது. தற்போது அடிப்படை சம்பள வரம்பு 15,000 ஆக இருப்பதால், குறைந்தபட்ச ஓய்வூதியம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த சம்பள உச்ச வரம்பை (Wage Ceiling Hike) அதிகரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால், ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.
EPFO போர்டல் வங்கி இணையதளம் போன்று செயல்படும்
EPFO போர்ட்டல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர், EPFO போர்ட்டலை வங்கி இணையதளம் போல மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஆறு மாதங்களில் இதில் அதிக முன்னேற்றம் காணப்படும் என்றும் அவர்கூறினார்.
EPFO -இல் ஜூலையில் 20 லட்சம் ஊழியர்கள் இணைந்தனர்
- ஜூலை மாதத்தில் சுமார் 20 லட்சம் புதிய ஊழியர்கள் இபிஎஃப்ஓ -வில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் மாண்டவியா கூறினார். நடப்பு நிதியாண்டில் அதிக எண்ணிக்கையிலானோர் ஜூலையில் வேலைகளைத் தொடங்கியுள்ளனர்.
- பணிகளை தொடங்கிய பிறகு மொத்தம் சுமார் 19.94 லட்சம் பேர் EPFO இல் பதிவு செய்துள்ளனர். இதில், முதன்முறையாக பணியை தொடங்கிய 10.52 லட்சம் பணியாளர்களும் அடங்குவர்.
- இதில், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 6.25 லட்சமாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ