புதுடெல்லி: PM Kisan Latest News: உங்களுக்கும் ஒன்பதாவது தவணை பிஎம் கிசான் (PM Kisan 9th Installment) கிடைக்கவில்லை என்றால், இதுதான் உங்களுக்கான கடைசி வாய்ப்பு. வரும் நாட்களில், பிரதமர் கிசான் யோஜனாவின் கீழ் பெறும் தொகையை அரசாங்கம் இரட்டிப்பாக்கலாம். இந்த பதிவின் முழுமையான செயல்முறையை இங்கே பார்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவசாயிகளுக்கு ரூ .4000 கிடைக்கும்
PM கிசான் (PM Kisan) சம்மன் நிதி திட்டத்தில் இதுவரை தங்களை பதிவு செய்யாத தகுதியான விவசாயிகள் செப்டம்பர் 30 க்கு முன் PM கிசானில் (PM Kisan Samman Nidhi Scheme) தங்களை பதிவு செய்து கொண்டால் ரூ .4000 பெறலாம். இதன் மூலம் நீங்கள் தொடர்ந்து 2 தவணை தொகையை பெறலாம். இதன் கீழ், உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அக்டோபர் அல்லது நவம்பரில் ரூ 2000 கிடைக்கும். இதற்குப் பிறகு, டிசம்பர் மாதத்திலும் உங்கள் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் தவணை வரும்.


ALSO READ | PM Kisan Yojana: இலவசமாக கிசான் கிரெடிட் கார்டை எவ்வாறு பெறுவது!


பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்
1. நீங்கள் வங்கி கணக்கு எண்ணை வைத்திருப்பது கட்டாயமாகும், ஏனெனில் அரசாங்கம் விவசாயிகளுக்கு DBT மூலம் பணம் அனுப்பப்படுகிறது.
2. உங்கள் வங்கி கணக்கு ஆதார் உடன் இணைக்கப்பட வேண்டும்.
3. நீங்கள் ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும். இது இல்லாமல் நீங்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.
4. உங்கள் ஆவணங்களை PM கிசானின் இணையதளமான pmkisan.gov.in இல் பதிவேற்றவும்.
5. ஆதார் இணைக்க, Farmer Corner விருப்பத்திற்குச் சென்று, Edit Aadhaar Detail என்ற விருப்பத்தைக் கிளிக் செய்வதன் மூலம் புதுப்பிக்கவும்.


விவசாயிகள் 9 தவணைகளைப் பெற்றுள்ளனர்
பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் அரசாங்கம் 9 தவணைகளை வெளியிட்டுள்ளது. முதல் தவணையாக, ரூ. 2000 தொகை 3,16,06,630 விவசாயிகளின் கணக்கில் சென்றது, இதுவரை 9 வது தவணையில், 9,90,95,145 விவசாயிகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. இப்போது நவம்பர் 30 வரை, 9 வது தவணையின் பணம் மீதமுள்ள விவசாயிகளின் கணக்கிற்கு அனுப்பப்படும். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் 2018 ஆம் ஆண்டில் PM கிசான் யோஜனா தொடங்கப்பட்டது.


PM Kisan Yojana ஒரு மகத்தான திட்டம்
இத்திட்டத்தின் கீழ், பயனாளி விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ .6000 அவர்களின் வங்கிக் கணக்கில் அனுப்பப்படுகிறது. இந்த தொகை 2000-2000 ரூபாய் என மூன்று தவணைகளில் அனுப்பப்படுகிறது.


ALSO READ | Free Cooking Gas: இலவச சமையல் எரிவாயு இணைப்பு அறிய வாய்ப்பு! முந்துங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR