Jackpot! வங்கியின் தவறுதலால் 37,100 கோடி ரூபாய் வாடிக்கையாளருக்கு கிடைத்தது
உங்கள் வங்கிக் கணக்கில் திடீரென 37,100 கோடி ரூபாய் வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்?
வங்கி ஒன்றின் கவனக்குறைவால் வாடிக்கையாளரின் கணக்கில் 50 பில்லியன் டாலர் பணம் டெபாசிட் ஆனது. உங்கள் வங்கிக் கணக்கில் திடீரென 37,100 கோடி ரூபாய் வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்? ஆனந்த அதிர்ச்சியாய் இருக்குக்ம் தானே! உண்மையிலுமே ஒரு வாடிக்கையாளருக்கு இப்படி நடந்துள்ளது. ஆனால், இந்தியாவில் அல்ல, அமெரிக்காவில்…
அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள வாடிக்கையாளரின் கணக்கில் மாபெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்தது. அவர்களுக்கும் ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது. போது கொண்டாட ஒரு தருண காரணம் இருந்தது.
பேடன் ரோக் (Baton Rogue) என்ற ஊரில் ரியல் எஸ்டேட் முகவர் டேரன் ஜேம்ஸ் மற்றும் அவரது மற்றும் அவரது மனைவியின் கூட்டுக் கணக்கில் 50 பில்லியன் டாலர் தொகை டெபாசிட் செய்யப்பட்டதாக செய்தி வந்தது. "நமது வங்கிக் கணக்கில் பல பூஜ்ஜியங்களைக் கொண்ட ஒரு பெரிய தொகை டெபாசிட் செய்யப்பட்டால், அதுவும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் கோடீஸ்வரர் என்ற நிலை ஏற்பட்டால் எப்படி இருக்கும். உண்மையில் அந்த உணர்வு எங்களுக்கு அப்போது ஏற்பட்டது” என்று ஜேம்ஸ் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
Also Read | இந்த பாம்பின் வானவில் வண்ணங்கள் உங்களை வசீகரிப்பது நிச்சயம்!!
இவ்வளவு பெரிய தொகை தங்கள் கணக்கில் வந்ததற்கான காரணங்களைப் பற்றி யோசித்த போது அவர்களுக்கு பல எண்ணங்கள் தோன்றியதாம். பணக்கார சொந்தக்காரர் யாராவது தங்கள் உயிலில் இந்த பெரும்தொகையை விட்டுச் சென்றார்களோ என்று நினைத்தார்களாம். இப்படி பல எண்ணங்கள் மனதில் தோன்றினாலும், உடனே தங்கள் வங்கியை தொடர்பு கொண்டார்கள்.
வாடிக்கையாளரிடம் பேசியபோது தான், பணம் தவறாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை வங்கி உணர்ந்தது. ஆனால், பணம் எங்கிருந்து வந்தது அல்லது யாரால் டெபாசிட் செய்யப்பட்டது என்ற எந்த தகவலையும் வங்கி வெளிப்படுத்தவில்லை.
இந்தத் தவறு தெரிந்தவுடனேயே, வங்கி அதிகாரிகள் பரிவர்த்தனையை மாற்றியமைக்கும் பணியைத் தொடங்கினார்கள். ஆனால், அதற்கு சில நாட்கள் ஆனது. அது வரையில் சாதாரண ரியல் எஸ்டேட் முகவர் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்று அவரது வங்கிக் கண்க்கு சொன்னது.
Also Read | Fact Check மூலம் போலி வலைத்தளம் குறித்து எச்சரிக்கும் PIB
தனக்கே அந்த பணம் கிடைத்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று அவருக்கு கற்பனையும் இருக்கிறது. அநாதரவான குழந்தைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் உதவ வேண்டும் சமூகத்திற்கும் மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று அந்த திடீர் கோடீஸ்வர குடும்பம் திட்டமிட்டார்கள்.
"இந்த உலகில் பலருக்கும் தேவைகள் இருக்கிறது. அவை அனைத்துமே பூர்த்தியாவதில்லை. நாம் ஆசைப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ முடிவதில்லை. என்னிடம் 50 பில்லியன் டாலர் இருந்தால், நான் மற்றவர்களுக்கு உதவி செய்வேன்" என்று ஜேம்ஸ் கூறினார்.
நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் என்று சொல்வதைப் போல சில நாட்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த 50 பில்லியன் டாலர் மாற்றப்பட்டு அவர் சாதாரன மனிதராகிவிட்டார்…. உலகே மாயம் தான்…
Also Read | ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா உள்ளிட்ட 8 பேருக்கு கிடுக்கிப்பிடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR