அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு சேவை வழங்குநரான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) பண நெருக்கடியை சந்தித்து நிலையில் தனது ஊழியர்களுக்கு தீபாவளி முன் ஊதிய மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த இரு வருடங்களாக கடும் நெருக்கடியில் தவித்து வரும் BSNL நிறுவனம், தனது ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் செலுத்த வேண்டிய தொகை கூட இல்லாமல் தவித்து வருகிறது. ஆக, செப்டம்பர் மாதங்கள் வரை ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை.


இதில் அதிருப்தி அடைந்த தொழிலாளர் சங்கம் ஒரு நாள் உண்ணாவிரதத்தை அச்சுறுத்தியது. BSNL இப்போது செப்டம்பர் தீபாவளிக்கு முன் 1.76 லட்சம் ஊழியர்களின் ஊதியத்தை வழங்க இருப்பதாக கூறியுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக எங்கள் வளங்கள் மூலம் ஊழியர்களுக்கு சம்பளம் தருவதாக BSNL தலைவரும் நிர்வாக இயக்குநருமான பி.கே.பார்வார் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்., "சேவைகளிலிருந்து ஒரு மாதத்திற்கு 1,600 கோடி வருவாய் ஈட்டுகிறோம். பி.எஸ்.என்.எல் சம்பளத்திற்கான மாத செலவு ரூ .850 கோடி. நிறுவனம் மாதத்திற்கு 1,600 கோடி ரூபாய் வருவாய் ஈட்டினாலும், இந்த தொகை சம்பளத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை, ஏனெனில் அதன் பெரும்பகுதி இயக்க செலவுகள் போன்றவற்றுக்காக செலவிடப்படுகிறது." என குறிப்பிட்டுள்ளார்.


BSNL, வங்கிகளிடமிருந்து அரசாங்க உத்தரவாதத்தின் மூலம் நிதி திரட்ட முயற்சிக்கிறது என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2019 நிதியாண்டில் BSNL ரூ .13,804 கோடி நிகர இழப்பைக் கொண்டிருந்தது. இதன் காரணமாக BSNL-லை MTNL உடன் இணைக்கும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.