Union Budget 2021: கொரோனா காலத்தில் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் கவனம் செலுத்தி, மருத்துவ சாதனங்கள் விஷயத்தில் இந்தியாவை தன்னிறைவு பெறும் திசையில் வழி நடத்திச் செல்ல, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பெரிய நிவாரணத்தை அறிவிக்கக்கூடும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்திய சுகாதாரத் துறையில் மருத்துவ சாதன உற்பத்தியாளர்களின் தேவையை பெரிதும் அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தகைய சூழ்நிலையில், நாட்டிலேயே மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க அரசாங்கத்தின் சார்பில் இந்த பட்ஜெட்டில் (Budget) இத்துறைக்கு ஊக்கம் கிடைக்கக்கூடும். இதில், உபகரணங்கள் மீதான வரி நிவாரணம் மற்றும் எளிதான கடன் போன்ற தேவைகள் குறித்து ஒரு பெரிய அறிவிப்பு இருக்கக்கூடும்.


கொரோனா காலத்தில் டெலிமெடிசின் ஆற்றிய முக்கிய பங்கு


1 பிப்ரவரி 2021-ல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது டெலிமெடிசின் வகித்த முக்கியமான பங்கை கருத்தில் கொண்டு, அவர் மருத்துவ சாதனத் துறைக்கான நிதியை அதிகரிக்கக்கூடும். சுகாதார உள்கட்டமைப்பில் முறையான மற்றும் விரிவான முன்னேற்றத்திற்கான அவசர தேவை உள்ளதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.


இந்த துறையில் தற்போது இருக்கும் வரி வழங்கல் அல்லது வரி ஒழுங்குமுறை, டெலிமெடிசின், வீட்டு சுகாதாரம் (Home Healthcare) மற்றும் கண்டறியும் சோதனைகளின் (Diagnostic) செலவுகளை உள்ளடக்கவில்லை என்ற கருத்து தொழில்துறையில் உள்ளது. இதில் பல வகையான செலவுகள் நிறுவனங்களிடமிருந்து வருகின்றன.


ALSO READ: Budget 2021: ஓய்வூதியதாரர்கள், அமைப்புசாரா துறைகளுக்கு காத்திருக்கிறதா good news?


வென்டிலேட்டர்கள் குறித்த முன்முயற்சியை அரசு எடுத்துள்ளது


மருத்துவ சாதன துறையில், வென்டிலேட்டரின் (Ventilator) உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக அரசாங்கம் ஒரு நல்ல முயற்சியை எடுத்துள்ளது. இக்கட்டான சூழல்களில் ஒரு முக்கிய மருத்துவ சாதனமாக இது இன்றியமையாதது. கொரோனா காலத்தில் இந்தியாவில் வென்டிலேட்டர்கள் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. பட்ஜெட்டில், மருத்துவ சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு எளிதில் கடன்கள் கிடைப்பது மற்றும் நீண்டகால மெச்யூரிட்டி ஆகிய வசதிகளை அரசாங்கம் அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியா பெரும்பாலான தேவைகளுக்கு இறக்குமதி செய்து வருகிறது


ஒரு அறிக்கையின்படி, கடந்த ஆண்டின் தொடக்கத்தில், மொத்த மருத்துவ உபகரணங்கள் தேவையில் 70 முதல் 80 சதவீதம் வரை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. அந்த நேரத்தில், இந்தியாவில் இந்த தொழில் துறையின் மொத்த மதிப்பு 7 பில்லியன் டாலருக்கு அருகில் இருந்தது.


இருப்பினும், அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா பிரச்சாரத்தின் கீழ், இந்தத் தொழில்துறையில் இப்போது பல முன்னேற்றங்கள் காணக்கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டில், மருத்துவ சாதனங்களில் விதிக்கப்படும் GST-யில் சில நிவாரணங்களை எதிர்பார்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


ALSO READ: Budget 2021: சாமானியரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா? எது விலை குறையும், எது கூடும்?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR