Budget 2021: நிர்மலா சீதாராமன் வழங்கிய பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்..!!
மோடி அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டு 2021 ஆண்டின் மொத்த செலவு ரூ .34.50 லட்சம் கோடி என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இது முதலில் மதிப்பிடப்பட்ட ரூ. 30.42 லட்சம் கோடியை விட அதிகமாகும்.
பட்ஜெட் 2021: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று, 2021 பிப்ரவரி 1, நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் ஆற்றிய உரையில் முக்கிய அம்சங்கள்
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளுக்கு அதிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
தனது பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதியளிக்கும் புதிய திட்டங்களை அறிவித்தார், 'பிரதமர் ஆத்மனிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா', ஆகிய திட்டங்களுக்கு அடுத்த ஆறு ஆண்டுகளில் ரூ .64,180 கோடி செலவாகும்.
புதிதாக அறிவிக்கப்பட்ட வளர்ச்சிக்கான நிதி நிறுவனத்தை மூலதனமாக்க ரூ .20,000 கோடி வழங்கப்படும் எனவும் சீதாராமன் அறிவித்தார், மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் “குறைந்தது ரூ .5 லட்சம் கோடி” கடன் வழங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என் குறிக்கோள் நிர்ணையிக்கப்பட்டிருப்பதாகவும் Nirmala Sitaraman குறிப்பிட்டார்.
நேரடி வரியில் மாற்றங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் - 75 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரி தாக்க்கல் செய்ய வேண்டாம் என அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது.
“நான் ஒரு சிறிய எண்ணிக்கையிலான பொருட்களுக்கு, விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி விதிக்கப்பட வேண்டும் என (AIDC) முன்மொழிகிறேன். எனினும், இந்த செஸ் வரியை பொருத்த வரையில் அதை அமலபடுத்தும் போது, பெரும்பாலான பொருட்களின் மீதா செஸ் வரி சுமை நுகர்வோர் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்கிறோம், ”என்று அவர் உறுதி கூறினார்.
செலவு மற்றும் நிதி பற்றாக்குறை
தனது உரையில், நிர்மலா சீதாராமன், நிதியாண்டு 21 க்கான மோடி அரசாங்கத்தின் (Modi Government) மொத்த செலவு ரூ .34.50 லட்சம் கோடி என்றும், இது முதலில் மதிப்பிடப்பட்ட ரூ. 30.42 லட்சம் கோடியை விட அதிகமாகும் என்றும் குறிப்பிட்டார். COVID-19 காரணமாக செலவினங்கள் அதிகரித்ததே இதற்கு காரணம் என்றும், செலவினங்களால் மக்கள் பயனடையும் வகையில் மத்திய அரசு கருத்தில் கொண்டு செயல்பட்டது என்றார்.
ALSO READ | பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி நிதி- FM நிர்மலா சீதாராமன்!
உலகிலேயே கொரோனா (Corona) இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என குறிப்பிட்ட நிதி அமைச்சர், 'ஒரே நாடு ஒரே ரேஷன்' (One Nation One Ration Card) திட்டம் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்துள்ளது என குறிப்பிட்டார்.
.
2020-2021 ஆம் ஆண்டில் ரூ .4.39 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்ட மூலதனச் செலவு, 2020-21 ஆம் ஆண்டில் ரூ .4.12 லட்சம் கோடியாக இருந்தது. 2020-21 நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5% ஆக உள்ளது ”என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
"2021-22 ஆம் ஆண்டில், மூலதனச் செலவிற்கு ரூ .5.54 லட்சம் கோடியை வழங்கப்பட்டுள்ளது, இது 2020-21 ஆம் ஆண்டின் அளவை விட 34.5% அதிகம். மூலதனச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கூடுதல் நிதி தேவைப்படும் திட்டங்கள் / துறைகளுக்கு வழங்கப்படவுள்ள பொருளாதார விவகாரத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ .44,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செலவினத்திற்கு மேல், மாநிலங்களுக்கும் தன்னாட்சி அமைப்புகளுக்கும் அவர்களின் மூலதன செலவினங்களுக்காக ரூ .2 லட்சம் கோடி ஒதுக்கப்படும். ”
இதன் காரணமாக, நிதியாண்டு 2021-22 நிதி பற்றாக்குறை இலக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8% ஆக இருக்கும்.
ALSO READ | Budget 2021: இந்திய பட்ஜெட் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் ..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR