இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்! தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!
Budget 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அட்டவணையை இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடுகிறார்.
Parliament Budget session: இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி குழுமத்தின் பங்குகள், 2002 குஜராத் கலவரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூட்டு உரையுடன் தொடங்கும். அதன்பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அட்டவணையை இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடுகிறார்.
1. கூட்டத்தொடரின் போது குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதே அரசாங்கத்தின் முதல் வேலை. எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய பிரச்சனைகள், அதானி-ஹிண்டன்பர்க் சர்ச்சை போன்ற பிரச்சினைகளை எழுப்பலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Budget 2023: பெட்ரோல், தங்கம் விலைகள் அதிகரிக்குமா! அதிர்ச்சி தருவாரா நிதியமைச்சர்!
2. இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரைக்குப் பிறகு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.
3. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நரேந்திர மோடி அரசின் கடைசி முழு அளவிலான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி சீதாராமன் தாக்கல் செய்வார்.
4. பட்ஜெட் தொடர்பான நான்கு மசோதாக்கள் உட்பட 36 மசோதாக்களை இந்த அமர்வின் போது கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
5. 27 அமர்வுகளைக் கொண்டிருக்கும் பட்ஜெட் ஆவணங்களை ஆய்வு செய்ய ஒரு மாத கால இடைவெளியுடன் ஏப்ரல் 6 வரை அமர்வு தொடரும். கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 14-ம் தேதி நிறைவடையும் மற்றும் இரண்டாம் பகுதி மார்ச் 12-ம் தேதி மீண்டும் கூடுகிறது.
6. கடந்த திங்களன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசாங்கம் நடத்தியது, அதில் எதிர்க்கட்சிகள் சில பிரச்சினைகளை பற்றி பேசியது. எதிர்க்கட்சித் தலைவர்கள் அதானி பங்குகள், பிபிசி ஆவணப்படத் தடை மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் குறுக்கீடு போன்ற பிரச்சினைகளை முன்வைத்தனர். ஆர்ஜேடி, சிபிஐ-எம், சிபிஐ, ஆம் ஆத்மி, தேசிய மாநாடு உள்ளிட்ட கட்சிகள் இந்தப் பிரச்னையை எழுப்பின.
7. ஜனாதிபதி முர்முவின் வழக்கமான உரையை புறக்கணிக்க BRS முடிவு செய்துள்ளது.
8. அடுத்த நிதியாண்டில் உலகிலேயே வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடரும், உத்தியோகபூர்வ வளர்ச்சி மதிப்பீடு 9 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
9. பொருளாதார ஆய்வறிக்கையை சீதாராமன் அவையில் தாக்கல் செய்த பிறகு, இந்த விவரங்களை தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் தெரிவிப்பார். பொருளாதார ஆய்வு என்பது கடந்த ஆண்டில் பொருளாதாரம் எவ்வாறு இருந்தது என்பது பற்றிய மதிப்பாய்வு ஆகும்.
10. மார்ச் 31 உடன் முடிவடையும் நிதியாண்டில் பொருளாதாரம் 7 சதவீதத்திலிருந்து வேகத்தை இழந்தாலும் பொருளாதார ரீதியாக இந்தியா முன்னணி வகிக்கும் என்று கூறப்படுகிறது. முந்தைய ஆண்டில் இது 8.7 சதவீதமாக இருந்த நிலையில் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டது.
மேலும் படிக்க | இனி வாட்ஸ்அப் மூலம் எல்ஐசி-யின் இந்த சேவைகளை பெறலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ