Budget 2024: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் ஒரு இடக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். எனினும், தேர்தல் நேரத்தில் மக்களை மகிழ்விக்கும் வகையில், அரசு இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்ப்புகள் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations)


குறிப்பாக வழக்கம் போல, வரி செலுத்துவோர் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். மக்களவை தேர்தலுக்கு (Lok Sabha Elections) முன், வரி செலுத்துவோருக்கு, அரசு பெரிய நிவாரணம் வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையின்  (New Tax Regime) கீழ், தற்போதுள்ள வரி விலக்கு (Tax Exemption) ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்படலாம். இந்த மாற்றத்திற்காக நிதி மசோதா கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது. பட்ஜெட் பணிகளுடன் தொடர்புடைய இரண்டு அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்தனர்.


மத்திய அரசு (Central Government) இந்த முடிவை எடுத்தால், புதிய வரி முறையில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை வரி செலுத்துவோர் (Taxpayers) எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விலக்கில் ரூ.50 ஆயிரத்திற்கான நிலையான விலக்கும் (Standard Deduction) அடங்கும். 2023 பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் 5 லட்சத்திலிருந்து 7 லட்சமாக விலக்கு அளிக்கப்பட்டது.


நிலையான விலக்கு சேர்க்கப்பட்டது


2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிய வரி முறைமையில் பல மாற்றங்களைச் செய்து அரசாங்கம் நிவாரணம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி இதற்கு முன்னர் புதிய வரி முறைமையில் முதலீடு அல்லது விலக்குக்கான உரிமை கோர முடியாது. ஆனால் பட்ஜெட்டில் அதில் நிலையான விலக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், வரி செலுத்துவோருக்கு ரூ.50,000 வரை வரி விலக்கு (Tax Deduction) அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) இந்த முறையின் கீழ் ரூ.15,000 வரை வரித் தள்ளுபடி (Tax Rebate) வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | ITR Refund இன்னும் கிடைக்கவில்லையா? காரணங்கள், சரி செய்வதற்கான வழிமுறைகள் இதோ


வரி வரம்பு உயர்த்தப்பட்டது


இது தவிர, புதிய முறையின் வருமான வரி அடுக்குகளிலும் (Income Tax Slabs) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், அடிப்படை விலக்கு வரம்பு முந்தைய ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது.


ஐடிஆர் தாக்கலில் சாதனை


2023-24 மதிப்பீட்டு ஆண்டில் டிசம்பர் 31 வரை 8.18 கோடி வருமான வரிக் கணக்குகள் (ITR) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது 2022-23ல் இதே காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட 7.51 கோடி ஐடிஆர்களை விட 9 சதவீதம் அதிகம்.


வரி வருவாய் 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது


வரி வசூலை அதிகரிக்க அரசு இதை பற்றி பல விதங்களில் வலியுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், வரி வருவாய் 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது, இது பட்ஜெட் மதிப்பீட்டை விட நேரடி வரிகளில் (Direct Taxes) 10.5 சதவீதமும், மறைமுக வரிகளில் (Indirect Taxes) 10.45 சதவீதமும் அதிகமாகும். மேலும் வரி விலக்கு (Tax Relief) குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | Income Tax Saving: வரி விலக்கு பெற... ‘இந்த’ FD முதலீடுகள் உதவும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ