Union Budget 2025: இன்னும் சில நாட்களில் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜட்டை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பட்ஜெட்டுக்கு முந்தைய ஆயத்தப்பணிகளின் ஒரு பகுதியாக, நிதியமைச்சர் தற்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்தி வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Budget 2025 Expectations for Middle Class: பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க மக்கள் மீது அரசின் கவனம்


இந்த பட்ஜெட்டில் வரி விவகாரத்தில் நடுத்தர வர்க்கத்திற்கு அரசாங்கம் பெரிய நிவாரணம் அளிக்கும் என நம்பப்படுகின்றது. மேலும், ஃபிக்சட் டெபாசிட், அதாவது FD -இல் பெறப்படும் வட்டியிலும் அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க மக்கள் மீது அரசின் கவனம் அதிக அளவில் இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.


Fixed Deposit: வங்கி FD -இல் பெறப்படும் வட்டியில் பெரிய மாற்றம்


வங்கிப் பத்திரங்களுக்குப் பெறப்படும் வட்டி மீதான வரியை ஈக்விட்டி போன்று கருதுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை வங்கிப் பத்திரங்களில் பெறப்பட்ட வட்டி வருமான வரி அடுக்குக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது. எனினும், இப்போது இந்த பட்ஜெட்டில் அதை LTCG/STCG இன் கீழ் அரசு கொண்டு வரக்கூடும் என கூறப்படுகின்றது.


மேலும் படிக்க | EPFO Withdrawal Rules: PF க்ளெய்ம் நிலையை அறிந்து கொள்ளும் எளிய முறை


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில், பங்குதாரர்கள் மற்றும் DFS, நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் கடன் மீதான வட்டிக்கு ஈக்விட்டி போன்ற பலன்களை வழங்க பரிந்துரைத்துள்ளனர். இதை பட்ஜெட்டில் அரசு அமல்படுத்தினால், டெபாசிட்களுக்காக தவிக்கும் வங்கிகளுக்கும் நிவாரணம் கிடைப்பதோடு, நடுத்தர மக்களுக்கும் டெபாசிட் தொகையில் பெரிய நிவாரணம் கிடைக்கும்.


Income Tax Slab: வருமான வரி அடுக்குகளில் பெரிய நிவாரணம் கிடைக்கும்


- புதிய வரி முறையிலும் அரசாங்கம் மாற்றங்களைச் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தற்போதைய நிலவரப்படி, புதிய வரி முறையில், ரூ.7.75 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. 
- ஆனால் இதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வெவ்வேறு அடுக்குகளில் வரி செலுத்த வேண்டும். 
- இந்த வரம்பை ரூ.7.75 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது. 
- இது நடந்தால், ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு புதிய வரி விதிப்பில் நடுத்தர வர்க்கத்தினர் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. 
- இதனுடன், 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை புதிய அடுக்கை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


Bank FD


வங்கிகளின் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு விதிக்கப்படும் வரி குறைக்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து பட்ஜெட்டுக்கு முன் விவாதிக்கப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | Budget 2025: இபிஎஸ் ஓய்வூதியத்தில் 5 மடங்கு அதிகரிப்பு, பட்ஜெட்டில் காத்திருக்கும் குட் நியூஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ