Union Budget 2025: இன்னும் சில நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என கூறப்படுகின்றது. வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக வருமான வரி, வரி அடுக்குகள், வரி சலுகைகள், புதிய நலத்திட்டங்கள் ஆகியவற்றில் பொது மக்களின் கவனம் அதிகமாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Budget 2025 Expectations: அரசு வரி செலுத்துவோர் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் என எதிர்பார்ப்பு


2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நெருங்கி வரும் நிலையில், வரி செலுத்துவோர் மீதான நிதிச் சுமையைக் குறைப்பதிலும், இந்தியாவின் வரி முறையை எளிமைப்படுத்துவதிலும் பல வித சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என பொருளாதார வல்லுனர்களும் துறை சார்ந்த நிபுணர்களும் பரிந்துரைத்துள்ளனர். அரசாங்கம் இந்த பட்ஜெட்டில் இதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


Taxpayers: வரி செலுத்துவோர் நலனுக்கான நிபுணர்களின் சில முக்கிய பரிந்துரைகள் இதோ:


- அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பை ரூ.5 லட்சமாக அதிகரிப்பது
- வரி விகிதங்களைக் குறைப்பது
- வரி கட்டமைப்புகளை எளிதாக்குவது


இந்த மாற்றங்கள் சாதாரண வரி செலுத்துவோருக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கக்கூடும். மேலும், இது மக்கள் கையில் பண இருப்பை அதிகரிக்கும், இதன் காரணமாக, வாங்கும் திறனும் அதிகரிக்கும். இது தேவைகளை தூண்டி நாட்டின் பொருளாதாரத்திற்கு சந்தை நகர்விற்கும் ஒரு உந்துதலை அளிக்கும் என நம்பப்படுகின்றது.


Income Tax Relief: வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம்


புதிய வரி முறையின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக மாற்றியமைக்க வேண்டும் என முன்னணி நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன. இதனுடன் குறைந்த வரி விகிதங்களும் இணைந்தால், நடுத்தர வர்க்க மக்களுக்கு இதனால் குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கக்கூடும். இது அவர்களது வாங்கும் திறனை அதிகரிக்கும்.


EPFO: இபிஎஃப் தொகைக்கான வரி அமைப்பில் மாற்றம்


ரூ.2.5 லட்சத்திற்கு மேலான வருங்கால வைப்பு நிதி (PF) வட்டியில் TDS பிடிக்கப்படுவதற்கு பதிலாக, பணத்தை எடுக்கும் போது, அதாவது வித்டிரா செய்யும் நேரத்திற்கு இதை மாற்றலாம் என பரிந்துரை உள்ளது. இந்த நடவடிக்கை சம்பளம் வாங்கும் நபர்களுக்கு இணக்கத்தை எளிதாக்குகிறது.


Tax Deduction At Source: TDS -ஐ எளிதாக்குவது


TDS-ஐ மேலும் எளிமைப்படுத்த, TDS விகிதங்களை 3–4 வகைகளாக தொகுக்கலாம் என்ற கருத்து உள்ளது. மேலும், சில பொருட்களுக்கு TDS-லிருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கவு முன்மொழியப்பட்டுள்ளது.


Employee Stock Ownership Plans 


ஊழியர் பங்கு உரிமைத் திட்டங்களுக்கான (ESOPs) வரி ஒத்திவைப்பு நன்மையை அனைத்து முதலாளிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் பங்குகளை விற்றால் மட்டுமே வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.


பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் முக்கிய சீர்திருத்தங்கள்


- 2023-24 ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ.31 டிரில்லியனுக்கும் அதிகமான வருமான வரி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வருமான வரி தாக்கலில் உள்ள சிக்கல்களையும், சர்ச்சைகளையும் குறைப்பதன் அவசரத்தையும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


- வரி முறையில் நெகிழ்வுத்தன்மை, கவர்ச்சிகரமான சலுகைகள், சோவரின் வெல்த் மற்றும் ஓய்வூதிய நிதிகளுக்கான விலக்குகளை நீட்டித்தல், வீட்டு சொத்து இழப்புகளை சீர் செய்வதற்கான நிதி வரம்புகளை நீக்குதல் ஆகியவை பரிந்துரைகப்பட்ட திட்டங்களில் அடங்கும்.


- மற்ற வருமானத்தை ஈடுசெய்ய வீட்டு சொத்து இழப்புகளைப் பயன்படுத்துவதற்கான வரம்பை நீக்க முன்மொழியப்பட்டுள்ளது. ஹைதராபாத், புனே, பெங்களூரு மற்றும் அகமதாபாத் போன்ற அடுக்கு-2 நகரங்களுக்கு தற்போது பெறுவதைப் போலவே 50% வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) விலக்கு வழங்கவும் பரிந்துரை உள்ளது.


- சில சொத்துக்களுக்கான 'வைத்திருக்கும் காலங்களைக்' குறைப்பதன் மூலமும், உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் IPO-களுக்கான வரிவிதிப்பு விதிகளில் உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதன் மூலமும் மூலதன ஆதாய வரி கட்டமைப்பை எளிமைப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Old Tax Regime: பழைய வரிமுறை பற்றி நிதி அமைச்சர் கூறுவது என்ன?


2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பழைய வருமான வரி முறையைச் சுற்றியுள்ள கவலைகளை எடுத்துரைத்தார். இது குறித்து அரசாங்கம் எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முக்கிய நோக்கம் வரி முறையை எளிமையாக்குவதுதான் என்று அவர் குறிப்பிட்டார். பழைய வரி முறையை நிறுத்துவது தொடர்பான எந்த முடிவும் விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகுதான் எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் நம்பிக்கை அளித்தார்.


புதிய வரி முறை பரந்த வரி அடுக்குகளையும் குறைந்த விகிதங்களையும் வழங்குகிறது என்றாலும், அது வரையறுக்கப்பட்ட விலக்குகளையே வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தகது.


மேலும் படிக்க | அரசு ஊழியர்கள், ஒய்வுதியதாரர்களுக்கு அதிர்ச்சி: இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது... விதிகளில் மாற்றம்


மேலும் படிக்க | நடுத்தர வர்க்கத்தினருக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.... வரி விதிப்பில் மாற்றம் வருமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ