LIC Insurance Policy: வாழ்க்கை நிலையற்றது. யாருக்கு எப்போது பணத்துக்கான தேவை ஏற்படும் என யாராலும் கணிக்க முடியாது. அப்படிப்பட்ட இக்கட்டான சூழல்களில் கை கொடுக்க, எ.ஐ.சி அவ்வப்போது பல திட்டங்களை அறிமுகம் செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திட்டங்களால் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை நீங்கள் பாதுகாக்க முடியும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு இலாபகரமான சேமிப்பாக (Saving Schemes) இருக்கக்கூடிய அப்படிபட்ட பாலிசிகளில் எல்.ஐ.சியின் ஜீவன் உமங் பாலிசியும் ஒன்றாகும். அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.


எல்.ஐ.சி ஜீவன் உமங் பாலிசி ஒரு எண்டோவ்மென்ட் திட்டமாகும்


ஜீவன் உமங் பாலிசி பல வகைகளில் மற்ற திட்டங்களிலிருந்து வேறுபட்ட பாலிசியாகும். 90 நாட்கள் முதல் 55 வயது வரையிலான வயதினர் இந்தக் கொள்கையை எடுக்கலாம். இது ஒரு எண்டோவ்மென்ட் திட்டமகும். 


இதில், லைஃப் கவர் உடன், மெச்யூரிடியில் மொத்தமாக ஒரு தொகையும் கிடைக்கிறது. மெச்யூரிடிக்கு பிறகு, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் கணக்கில் நிலையான வருமானம் வரும். மறுபுறம், பாலிசிதாரரின் (Policy Holder) மரணத்திற்குப் பிறகு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்டவர்கள் மொத்த தொகையை பெறுவார்கள். இந்த திட்டத்தின் மற்றொரு அம்சம் என்னவென்றால், இது 100 ஆண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கிறது.


ALSO READ: New Jeevan Shanti Policy: LIC இன் சிறந்த பாலிசி அறிமுகம்


27.60 லட்சம் கிடைக்கும் 


இந்த பாலிசியில் ஒவ்வொரு மாதமும் ரூ .1302 பிரீமியம் செலுத்தினால், ஒரு ஆண்டில் இந்த தொகை ரூ .15,298 ஆகும். இந்த பாலிசி 30 ஆண்டுகள் செயலில் இருந்தால், அந்த தொகை சுமார் ரூ .4.58 லட்சமாக அதிகரிக்கும். உங்கள் முதலீட்டில் 31 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நிறுவனம் 40 ஆயிரம் வருமானத்தைத் தரத் தொடங்குகிறது. 31 வருடங்கள் முதல் 100 ஆண்டுகள் வரை நீங்கள் ஆண்டுதோறும் 40 ஆயிரம் வருமானத்தை பெற்றால், உங்களுக்கு சுமார் ரூ .7.60 லட்சம் தொகை கிடைக்கும்.


பாலிசிதாரருக்கு டர்ம் ரைடருக்கான நன்மையும் கிடைக்கும் 


இந்த பாலிசியின் கீழ், தற்செயலான மரணம் ஏற்பட்டால், அல்லது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டால், டர்ம் ரைடருக்கான நன்மையும் கிடைக்கும். இந்த பாலிசிக்கு சந்தை அபாயத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.


இந்த பாலிசியில் எல்.ஐ.சியின் (LIC) இலாபங்கள் மற்றும் இழப்புகளின் தாக்கம் நிச்சயமாக உள்ளது. இந்த பாலிசியை எடுத்தால், வருமான வரியின் 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். ஜீவன் உமங் பாலிசியை ஒருவர் எடுக்க விரும்பினால், அவர் குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: LIC Warning: இதை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், ஜாக்கிரதை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR