அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களுக்கு இவ்வளவு சம்பளமா!? ஒரு அப்ளிகேஷனை போட்றலாமா?
Mukesh Ambani House Keepers Salary : இந்தியாவின் டாப் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
Mukesh Ambani House Keepers Salary : சில நாட்களுக்கு முன்பு வரை, முகேஷ் அம்பானியும் அவரது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியும்தான். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிதான், இந்தியா மட்டுமன்றி, இன்னும் பிற நாடுகளிலும் தேடப்பட்ட நிகழ்வாக இருந்தது. இப்படி, தான் என்ன செய்தாலும் ஒட்டு மொத்த உலகையே திரும்ப பார்க்க வைத்தவர், முகேஷ் அம்பானி. பாதி இந்தியாவையே விலைக்கு வாங்கி விடும் அளவிற்கு சொத்து இருக்கும் இவருக்கு, கோடிக்கணக்கில் சொத்து மதிப்புள்ள வீடு இருக்கிறது. இந்த வீட்டில் பல வேலையாட்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு பல லட்சம் சம்பளமும் வழங்கப்படுகிறது.
அம்பானியின் வீடு:
முகேஷ் அம்பானிக்கு பல வீடுகள் இருந்தாலும், அவர் மும்பையில் உள்ள உயர்மட்ட அல்டாமவுட்ன் சாலியில் உள்ள ஆடம்பர பங்களாவில் வசித்து வருகின்றார். இவரது குடும்பத்தினரும் இவருடன்தான் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் பெயர், ஆண்டிலியா. இந்த பெயரை வைத்தது நீதா அம்பானிதான்.
இந்த பங்களாவின் மதிப்பு மட்டும், சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர்களாம். உலக அளவில், மிகவும் விலை உயர்ந்த வீடுகளில், இந்த வீடு இரண்டாவது வீடாக இருகிறது. இந்த வீட்டில், மூன்று ஹெலிபேடுகள், 169 கார்கள் மற்ற்ம் 50 இருக்கைகள் கொண்ட தியேட்டர்கள் என பல உள்ளன. அது மட்டுமன்றி, நீச்சல் குளங்கள், யோகா ஸ்டுடியோ, ஸ்பா செண்டர், உள்ளையே கோவில் என வெளியிலே எங்கும் எதையும் தேட முடியாத அளவிற்கு எல்லாம் உள்ளேயே இருக்கிறது.
மேலும் படிக்க | டாப் பணக்காரர்களின் லிஸ்டில் இடம் பெற்ற 4 மாத குழந்தையின் பெயர்! அது எப்படிப்பா?
தொழிலாளர்களின் சம்பளம்..
அம்பானியின் வீடு, சுமார் 27 மாடிகளை கொண்டதாக இருக்கிறது. இதில், மொத்தம் 600 பணியாளர்கள் வேலை செய்கின்றனராம். தோட்டத்தை பார்த்துக்கொள்வதர்கு தோட்டக்காரர்கள், பாடி கார்ட்ஸ், பிளம்பர்கள், கார் ஓட்டுநர்கள், பணிப்பெண்கள் மற்றும் குக் செய்வதற்கு சமையல்கார்கள் என பல பேர் வேலைக்கு இருக்கின்றனர்.
இவர்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பதற்கென்றே ஒரு பள்ளியும் கட்டிக்கொடுத்துள்ளார், முகேஷ் அம்பானி. அது மட்டுமன்றி, இந்த தொழிலாளர்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் வேலையையும் பார்த்து வருகிறார். இவர்கள், அனைவரும் முகேஷ் அம்பானியின் வீட்டு வளாகத்திலேயே தங்கும் வகையில் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.
அம்பானி வீட்டின் பணியாளர்களுக்கு, இவ்வளவு வசதி செய்து தந்துள்ளதற்கான காரணம், அம்பானி வீட்டில் இருந்து யார், எப்போது அழைத்தாலும் அவர்கள் அழைக்கும் தூரத்தில் இருக்க வேண்டுமாம். இங்குள்ள சில உயர்மட்ட ஊழியர்களுக்கு மாத வருமானம் மட்டும் சுமார், ரூ.3 லட்சமாக இருக்கிறதாம். இதை கேட்டத்தில் இருந்து வேலைக்கு செல்லும் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள், “பேசாம முகேஷ் அம்பானி வீட்ல ஒரு அப்ளிகேஷனை போட்டு விடலாமா?” என்று யோசித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | NPS Log-In செயல்முறையில் மாற்றம்: ஏப்ரல் 1 முதல் புதிய விதி, முழு தகவல் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ