Medical Courier Service: இன்றைய தொழில்நுட்ப காலத்தி, பைக் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் இல்லாதாவர்களை பார்ப்பது மிகவும் அரிது. இந்நிலையில், உங்களிடம் இரண்டும் இருந்தால் போது. பம்பர் வருமானம் ஈட்ட ஒரி அருமையான பிஸினஸ் ஐடியாவை கொண்டு வந்துள்ளோம்.  அது தான் மருத்துவ கொரியர் சேவை. மருந்துகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் மெடிக்கல் கொரியர் சேவையை தொடங்குவதன் மூலம் நீங்கள் மாதம் தோறும் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம்.  மேலும், இதில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிமாண்ட் அதிகம் உள்ள  மருத்துவ கொரியர் சேவை


இன்றைய காலகட்டத்தில், பிள்ளைகள் வெளிநாடு அல்லது வெளியூர் சென்று படிப்பது, வேலை பார்ப்பது அதிகரித்து உள்ளதால் வயதானவர்கள் பலர், தனியாக வசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ கொரியர் சேவை தொடங்குவது அவர்களுக்கு மிகவும் உதவிகரமாகவும் இருக்கும். மூத்த குடிமக்கள் மட்டுமல்ல, தற்போது பலரும் வீட்டில் இருந்த படியே, மருந்து பொருட்கள் மற்றும் இதர பொருட்களை பெற ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் போக்கு அதிகரித்துள்ளதை காணலாம்


பல நேரங்களில் மெடிக்கல் ஸ்டோரில், மருந்து விநியோகம் செய்ய ஆள் போதிய ஆள் இருக்காது. அல்லது மருந்துகளை டெவரி செய்ய ஒரு நாள் கூட எடுக்கலாம். இந்நிலையில், வாடிக்கையாளரிடம் இருந்து மருத்துவர் பரிந்துரைத்த மருந்துச் சீட்டைப் பெற்று, மருந்துக் கடையில் இருந்து மருந்தை வாங்கி வாடிக்கையாளரிடம் வழங்க வேண்டும். விரும்பும் ஆர்வமுள்ள எவருக்கும் இதில் எண்ணற்ற வாய்ப்பு உள்ளது. வாட்ஸ்அப் அல்லது ஈ-மெயில் மூலமாகவும் மருத்துவர் தந்த மருந்துச் சீட்டை பெற்றுக் கொண்டு மருந்துகள் வாங்கி கொடுக்கலாம். சில நேரங்களில் நீங்களே மருத்துவர் எழுதிக் கொடுத்த பிரிஸ்கிரிப்ஷனை வாடிக்கையாளர் இருப்பிடம் சென்று வேண்டியிருக்கும்.  இந்த சேவை மூலம் நீங்கள் பணம் ஈட்டலாம். 


மேலும் படிக்க | ஊர் சுற்ற பிடிக்குமா? அப்போ அதை வைத்தே கை நிறைய சம்பாதிக்கலாம்..எப்படி?


பம்பர் வருமானம் பெறும் வழிமுறை


முதலாவதாக, மருந்து விநியோக சேவை வழங்க உங்களுக்கு பணம் கிடைகுவதை வழக்கமாக கொண்டால், கடன் மற்றும் கமிஷனும் கிடைக்கும்.  மருந்து கடை பில் தொகை மற்றும் சேவைக் கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்து சேவைக் கட்டணமும் மருந்து கடையில் இருந்து கமிஷனும் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சமூக ஊடகங்கள் மூலம் உங்கள் மருத்துவ கொரியர் சேவை வணிகத்தை விளம்பரப்படுத்தலாம். 


மருத்துவ கூரியர் சேவையில் கிடைக்கும் லாபம்


உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது உங்கள் சேவையை விரிவுபடுத்த, ஒருவரை நீங்கள் பணியமர்த்தினால் உங்கள் வருமானம் இன்னும் அதிகரிக்கும். இதன் மூலம் மாதம் ரூ.50,000 என்ற அளவில் வருமானம் கிடைக்கும்.  சேவை பெருக பெருக மாதம் ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவிற்கு வருமானம் உயரும்.


(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையானது தகவல் நோக்கத்திற்காகவும், வாசகர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான யோசனைகளை வழங்கும் நோக்கில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. வணிகம் அல்லது சேவை மூலம் கிடைக்கும் வருமான அளவுகள், குறிப்பிட்ட வகை தொழில் அல்லது சேவையில் கிடைக்கும் வருமானம் தொடர்பான புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்ட அனுமானங்கள். Zee News கட்டுரை மூலம் எந்த விதமான நிதி ஆலோசனைகளையும் வழங்க விரும்பவில்லை. எந்தவொரு வணிக முயற்சியையும் தொடங்குவதற்கு, சந்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.)


மேலும் படிக்க | ஆதார் கார்ட் மூலம் கடன் வாங்குவது எப்படி? இந்த வழிமுறைகள் மூலம் பெற முடியும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ