தனக்கென சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்பது பலரது கனவாகவும் லட்சியமாகவும் இருக்கும். அதுவும், கொரோனா வந்த பிறகு சொந்த வீடு இல்லையே என்று ஏங்கியவர்கள் ஏராளம்.  எப்படியாவது வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த வங்கியில் கடன் வாங்கலாம், சிறப்புச் சலுகைகள் ஏதேனும் உள்ளதா; கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்த முடியுமா என்றெல்லாம் ஆலோசிப்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடு கட்ட நினைப்பவர்கள் வீட்டுக் கடன் (Home Loan) வாங்கி எளிதாக வீடு கட்ட முடியும். ஆனால், எந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்று பார்த்து வாங்க வேண்டும். 


ALSO READ | LIC வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி, வீட்டுக் கடனின் EMI இல் சிறப்பு சலுகை!


கோடாக் மகிந்திரா பேங்க் - 6.65% முதல் 7.30%
பஞ்சாப் & சிந்த் பேங்க் - 6.65% முதல் 7.35%
பேங்க் ஆஃப் பரோடா - 6.75% முதல் 8.35%
பஞ்சாப் நேஷனல் பேங்க் - 6.80% முதல் 7.85%
செண்ட்ரல் பேங்க் - 6.85% முதல் 7.30%
ஐடிபிஐ பேங்க் - 6.85% முதல் 10.05%
யூசிஓ பேங்க் - 6.90% முதல் 7.25%
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 6.90% முதல் 7.40%
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா - 6.90% முதல் 8.40%
ஆக்சிஸ் பேங்க் - 6.90% முதல் 8.55%


இன்றைய காலகட்டத்தில் பெரிய அளவிலான தொழிலதிபர்களும், சம்பளம் வாங்குபவர்களும் கூட, வங்கியில் கடன் வாங்கித் தான் வீடு கட்டுகின்றனர். அப்படி கடன் வாங்கிக் கட்டினாலும், எங்கு குறைவான வட்டியில் கடன் கிடைக்கிறது என்பதனை ஆலோசித்து கடன் வாங்கலாம் என்பதே ஆலோசகர்களின் கருத்து. ஏனெனில் அந்த சிறு முயற்சி கூட, உங்களின் கடன் சுமையை சற்று குறைக்கக் கூடும் என கூறுகின்றனர்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR