பிரியாணியை டெலிவரி செய்யும் மெஷின்: சென்னை பிரியாணி கடையின் புதிய முயற்சி
பிரியாணி இனி தானியங்கி முறையில் டெலிவரி செய்யும் வகையில், சென்னையை சேர்ந்த நிறுவனம் மெஷின் ஒன்றை உருவாக்கியிருப்பதுடன் முதல் ஆளில்லா பிரியாணி நிலையத்தையும் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த BVK பிரியாணி நிறுவனம் முழு தானியங்கி முறையில் இந்தியாவின் முதல் ஆளில்லா பிரியாணி விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளனர். சென்னை கொளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அவர்களின் முதல் பிரியாணி கடை அமைந்திருக்கிறது. ஃபஹீம் என்பவர் தான் Auxus Foodtech (BVK) நிறுவனத்தின் மாஸ்டர் மைண்ட். நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் F&B துறையில் நிர்வாக இயக்குநராக பணியாற்றி இருக்கும் அவர், இந்த துறையில் மிக நீண்ட நெடிய அனுபவமும் கொண்டுள்ளார். அதனடிப்படையிலேயே இந்த நிறுவனத்தையும் இப்போது தொடங்கியிருக்கிறார்.
மேலும் படிக்க | சிம்பிளா ஆரம்பித்த ஸ்நாக்ஸ் கம்பெனி 175 கோடிக்கு விற்பனை: சகோதரிகளின் சாதனை பயணம்
வணிக திட்டமிடல், வணிக மேம்பாடு மற்றும் மார்க்கெட்டிங் யுக்தி, விற்பனை மேலாண்மை ஆகியவற்றில் இருக்கும் நிபுணத்துவமும் திறமையையும் Auxus Foodtech (BVK) நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் பேசும்போது, வாடிக்கையாளர்கள் எந்த ஊழியர்களின் தொடர்பும் இல்லாமல் தங்கள் உணவை ஆர்டர் செய்யலாம், பணம் செலுத்தலாம். 5 நிமிடங்களுக்கும் குறைவாக பிரியாணி கிடைக்கும். மேலும், இனி வரிசையில் காத்திருக்க வேண்டாம் அல்லது மனித தவறுகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்காது என கூறியுள்ளார்.
BVK (பாய் வீட்டு கல்யாணம்) பிரியாணியின் ஆட்டோமேடிக் அமைப்பில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்து அல்லது உங்கள் கார்டைப் பயன்படுத்தி உங்கள் பிரியாணியை ஆர்டர் செய்து பணம் செலுத்த உங்களை அனுமதிக்கிறது. உங்கள் ஆர்டர் தயாரானதும், உங்கள் உணவைப் பெற டச் ஸ்கிரீனில் "Open Door" அம்சத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களது பிரியாணி தயாராக சுடச்சுட கிடைக்கும்.
BVK பிரியாணியை பொறுத்தவரையில் மிகவும் உண்மையான பிரியாணி அனுபவத்தை வழங்குவதில் உறுதியாக உள்ளனர். நிலக்கரி மற்றும் விறகுகளைப் பயன்படுத்தி, அவர்களின் பிரியாணிகள் சரியான முறையில் சமைக்கப்படுகின்றன. மெனுவில் மட்டன் பாயாவிலிருந்து இடியாப்பம், பரோட்டா, அல்வா மற்றும் பல விருப்பங்கள் உள்ளன. பிரியாணியின் விலை ரூ.220 முதல் ரூ.449 வரை இருக்கும். விரைவில் சென்னை முழுவதும் மேலும் 12 இடங்களுக்கு தங்கள் புதுமையான அம்சத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ