Canara Bank FD: முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம்... கனரா வங்கியின் முக்கிய அறிவிப்பு
கனரா வங்கி: முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி நிலையான வைப்புகளுக்கான (FD Deposits) வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது.
கனரா வங்கி: முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி நிலையான வைப்புகளுக்கான (FD Deposits) வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ரூ. 3 கோடி வரையிலான FD முதலீடுகளுக்கு பொருந்தும். புதிய விகிதங்கள் டிசம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன என கனரா வங்கியின் இணையதளத்தில் தகவல் கூறப்பட்டுள்ளது.
கனரா வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டு காலத்திற்கான FD முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது. இந்நிலையில், மாற்ற அமைக்கப்பட்ட வட்டி விகிதத்திற்கு பிறகு, பொது வாடிக்கையாளர்களுக்கு FD மீது 4% முதல் 7.40% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.90% வரையிலும் கனரா வங்கி வட்டியை வழங்கும்.
கனரா வங்கி FD மீதான புதிய வட்டி விகிதங்கள் விபரம்
கனரா வங்கி இப்போது 7 முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்பு என்னும் FD முதலீடுகளுக்கு (Investment Tips) 4 சதவீத வட்டி விகிதத்தையும், 46 முதல் 90 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 5.25 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. அதே போன்று, 91 முதல் 179 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 5.50 சதவீத வட்டி விகிதத்தையும், 180 முதல் 269 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 6.15 சதவீத வட்டி விகிதத்தையும் கனரா வங்கி வழங்குகிறது. 70 நாட்கள் மற்றும் 1 வருடத்திற்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கு கனரா வங்கி 6.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் 1 வருட நிலையான வைப்புகளுக்கு 6.85 சதவீத வட்டி கிடைக்கும். அதே நேரத்தில் 444 நாட்களில் முதிர்ச்சியடையும் FD திட்ட முதலீடுகளுக்கு 7.25 சதவீத வட்டி வழங்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள் விபரம்
மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு திட்டங்களைப் பொறுத்தவரை, ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்ச்சியுடன் கூடிய டெபாசிட்டுகளுக்கு 4% முதல் 7.90% வரையிலான வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது. "ரூ. 3 கோடிக்கும் குறைவான மற்றும் 180 நாட்கள் அல்லது அதற்கு அதிகமான முதிர்ச்சி காலத்துடன் கூடிய முதலீடுகளை (NRO/NRE மற்றும் CGA வைப்புத் தொகையைத் தவிர) செய்யும் மூத்த குடிமக்களுக்கு 0.50% கூடுதல் வட்டி கிடைக்கும்" என்று வங்கி தெரிவித்துள்ளது.
சூப்பர் மூத்த குடிமக்களுக்கான FD விகிதங்கள் விபரம்
கனரா 444 திட்டத்தின் கீழ் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு (80 வயது மற்றும் அதற்கு மேல்) 0.60 சதவீத கூடுதல் வட்டி விகிதம் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தேவைப்பட்டால் முதிர்ச்சிக்கு முன்னால் பணத்தை எடுக்கும் வசதி கொண்ட டெபாசிட்டுகளுக்கு 7.85 சதவீத வட்டியும், முதிர்ச்சிக்கு முன்னால் பணத்தை எடுக்கும் வசதி இல்லாத டெபாசிட்டுகளுக்கு 8 சதவீத வட்டியும் கிடைக்கும்.
முதிர்ச்சி காலத்திற்கு முன்பாக, பணத்தை திரும்பப் பெறுவதற்கான அபராதம் விபரம்
முதிர்ச்சி காலத்திற்கு முன்பாக, பணத்தை திரும்பப் பெறுவது அல்லது கணக்கை மூடுவதற்கான அபராத தொகையை பொறுத்தவரை, கனரா வங்கி, 2019, மார்ச் 12ம் தேதிக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட டெபாசிட்டுகளுக்கு, ₹3 கோடிக்கும் குறைவான உள்நாட்டு மற்றும் NRO டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 1% அபராதம் தொகையை விதிக்கிறது.
மேலும் படிக்க | EPFO: 2025 ஜூன் முதல் புதிய விதிகள்?... அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விபரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ