இப்போதெல்லாம் வாகனங்களுக்கு கடன் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது, வாகன கடன்கள் எளிமையானதாக இருக்கிறது.  நமக்கு பிடித்த வாகனத்தை வாங்க நம்மிடம் போதுமான பணம் இல்லாமல் இருந்தாலும் வாகன கடன்கள் மூலம் நமக்கு பிடித்த வாகனங்களை வாங்கிக்கொள்ள முடியும்.  கார் கடன் வாங்க நாம் முக்கியமாக செலுத்த வேண்டிய ஒன்று தான் செயலாக்க கட்டணம்.  கடனைச் செயலாக்குவதற்கும் அனுமதிப்பதற்கும் வங்கியால் ஏற்படும் நிர்வாகச் செலவுகளுக்கான கட்டணம் தான் இந்த செயலாக்க கட்டணம்கும்.  இந்த கட்டணம் குறைந்த அளவில் தான் இருக்கும் மற்றும் இந்த கட்டணத்தின் அளவு வங்கிக்கு வங்கி மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.  செயலாக்க கட்டணம் மொத்த கடன் தொகையில் 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்களது கடன் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும்.  உங்கள் வங்கி கணக்கிற்கு கடன் தொகை மாற்றப்படும்போது அந்த தொகையிலிருந்து செயலாக்க கட்டணம் கழிக்கப்பட்டு மீதமுள்ள பணம் கணக்கில் மாற்றப்படும்.  சில வங்கிகள் கார் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது.  உதாரணமாக, பாங்க் ஆஃப் பரோடா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகியவை செயலாக்க கட்டணத்தை மார்ச் 31, 2023 வரை தள்ளுபடி செய்துள்ளன.  வங்கியால் வசூலிக்கப்படும் செயலாக்க கட்டணம் ரூ.1,000 முதல் ரூ.9,000 வரை இருக்கும்.  


மேலும் படிக்க | Jackpot! உங்கள் தலை எழுத்தை மாற்றும் ‘இந்த’ பிங்க் நிற 20 ரூபாய் நோட்டு!


உதாரணமாக இந்தியன் வங்கியும் சவுத் இந்தியன் வங்கியும் மொத்தக் கடன் தொகையில் முறையே 0.5 சதவீதம் மற்றும் 1 சதவீதம் செயலாக்க கட்டணத்தை வசூலிக்கின்றன, அதிகபட்சமாக கடன் வாங்குபவர்களிடம் ரூ. 10,000 வரை செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.  யூசிஓ வங்கி கடன் தொகையில் 1 சதவீதத்தை செயலாக்கக் கட்டணமாக அதிகபட்ச வரம்பு ரூ. 1,500 வரை வசூலிக்கிறது, ஐடிபிஐ வங்கி செயலாக்கக் கட்டணமாக ரூ. 2,500 வரை வசூலிக்கிறது, ஹெச்டிஎஃப்சி வங்கி கடன் தொகையில் 0.5 சதவீதத்தை செயலாக்கக் கட்டணமாக வசூலிக்கிறது, இது ரூ.3,500 முதல் ரூ.8,000 வரை இருக்கும்.  கர்நாடகா வங்கி ரூ.3,000 முதல் ரூ.11,000 வரை செயலாக்க கட்டணம் வசூலிக்கிறது, ஃபெடரல் வங்கி செயலாக்கக் கட்டணமாக ரூ.2,000 முதல் ரூ.4,500 வரை வசூலிக்கிறது.  இப்போது கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் நீங்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இங்கே பார்ப்போம்.


1) முதலாவதாக கடன் வழங்குபவர்கள், கடன் வாங்குபவரின் கிரெடிட் ஸ்கோரை தான் கவனிக்கின்றனர், கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், வட்டி விகிதம் குறையும்.


2) மற்றொரு முக்கியமான காரணி நீங்கள் செலுத்தும் முன்பணம் தான், நீங்கள் குறைந்த அளவில் முன்பணம் செலுத்தினால், வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.  அதுவே முன்பணம் அதிகமாக செலுத்தினால் வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.  


3) கடன் காலம் குறைவாக இருந்தால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும், கடன் காலம் நீண்ட காலமாக இருந்தால் வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.  எனவே கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் வட்டி விகிதத்தை கவனிக்க வேண்டியது அவசியம்.


4) காரின் மாடலும் வங்கியால் வசூலிக்கப்படும் வட்டி விகிதத்தைப் பொறுத்து இருக்கும்.  கார் பழையதாகி, அதன் மறுவிற்பனை மதிப்பு குறைவாக இருந்தால் வங்கிகள் அதிக வட்டி விகிதத்தை விதிக்கிறது.  அதேசமயம் மறுவிற்பனை மதிப்பு அதிகமாக உள்ள கார்களுக்கு வட்டி விகிதம் குறைவாக விதிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு ஜாக்பாட், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறலாம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ