புதுடெல்லி: DTH சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் ஒவ்வொரு மாதமும் உங்கள் TATASKY கணக்கை ரீசார்ஜ் செய்தாலும், நல்ல கேஷ்பேக் கிடைக்கவில்லை என்றால், தற்போது இந்த நிறுவனம் சந்தாதாரர்களுக்கு ஒரு சிறந்த சலுகையைக் கொண்டுள்ளது. இந்த TATASKY சலுகையின் உதவியுடன், சந்தாதாரர்கள் இரண்டு மாதங்கள் வரை கேஷ்பேக் பெறலாம். எனவேTATASKY வழங்கும் இந்த சலுகையைப் பற்றி தெரிந்து கொள்வோம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கார்டு உடன் ரீசார்ஜ் செய்து கேஷ்பேக் பெறுங்கள்
TATASKY மீதான சலுகைகளின் கீழ் சந்தாதாரர்கள் மிகப்பெரிய பட்ஜெட்டை (Budget) உருவாக்க முடியும். TATASKY வலைத்தளம் அல்லது TATASKY மொபைல் பயன்பாடு மூலம் பயனர்கள் தங்கள் கணக்கை ரீசார்ஜ் செய்யும் போது மட்டுமே கேஷ்பேக் (Cashback) கிடைக்கும். இது மட்டுமல்லாமல், நீங்கள் ரீசார்ஜ் செய்ய பாங்க் ஆப் பரோடா (Bank Of Baroda) கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது மட்டுமே கேஷ்பேக் ரீசார்ஜில் கிடைக்கும். இந்த சலுகையை ஒரு கார்டில் ஒரு முறை மட்டுமே பெற முடியும்.


ALSO READ | டிஜிட்டல் இந்தியாவை தொடர்ந்து, Wi-Fi புரட்சி; இனி டீ கடையில் கூட Wi-Fi கிடைக்கும்!


சலுகை மார்ச் 31 வரை செல்லுபடியாகும்
நிறுவனத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த சலுகை 31 மார்ச் 2021 வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த டாடா ஸ்கை சலுகையின் நன்மை 12 மாதங்களுக்கு ஒரே நேரத்தில் ரீசார்ஜ் செய்யும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 


கேஷ்பேக் எப்போது கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
கேஷ்பேக் தொகை பயனரின் கணக்கில் கிரெடிட் செய்யப்படும், ஆனால் ஒரே நேரத்தில் அல்ல, முதல் மாத கேஷ்பேக் 24 மணி நேரத்திற்குள் கிரெடிட் செய்யப்படும், இரண்டாவது மாதத்திற்கான கேஷ்பேக் தொகை 7 நாட்களுக்குள் கிரெடிட் செய்யப்படும்.


ALSO READ | Jio Vs Airtel: ₹.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் எது சிறந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR